By Village Missionary Movement
Tuesday, 10-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 10.12.2024
இலவசமாய் கொடுங்கள்
"…இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்" - மத்தேயு 10:8
இங்கிலாந்து நாட்டு இராணுவ தளபதி ஒருவர், தன் கடமைகளை இராணுவ வீரர்கள் சரியாக செய்கிறார்களா? என்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தன் கடமைகளை சரிவர செய்யாதவர்கள் நாட்டிற்கும், தேவனுக்கும் உகந்தவர்கள் அல்ல, நமக்கு உள்ளது எல்லாம் தேவனாலும், தேசத்தாலும் தரப்பட்டது. அதை தேவனுக்கும் தேசத்துக்கும் கொடுத்து தீர்க்க வேண்டும் என்று எப்போதும் கூறுபவர். இவர் தனது இராணுவ வீரனின் அறையில், குறிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் விளக்கு எரிவதை அறிந்து, அந்த அறைக்குச் சென்றார். அங்கு ஒரு இராணுவ தியானம் வீரர் மேஜையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மேஜையில் ஒரு பேப்பரில், " செலுத்த வேண்டிய கடன் இவ்வளவு உள்ளது, யார் எனக்காக செலுத்துவார்? என்று எழுதியிருந்தது. அந்த பேப்பரை பார்த்த தளபதி, "நான் அதை செலுத்துவேன்" என்று கையெழுத்திட்டு வந்தார். இராணுவ தளபதி பேச்சில் அல்ல, செயலிலும் வல்லவர் என்பதை இராணுவ பட்டாளமே அறிந்தது. நாம் இன்று பேச்சிலா, செயலிலா எதில் தேவனை கனப்படுத்துகிறோம்? சிந்திப்போம்!
தேவன் நமக்குத் தந்தது எல்லாமே இலவசம். இலவசமாய் பெற்றதை இலவசமாய்க் கொடுங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார். இயேசு கிறிஸ்து நமக்கு இலவசமாய் அநேக காரியங்கள் தந்திருக்கிறார். விசுவாசத்தை, இரட்சிப்பை, பரிசுத்த ஆவியை மற்றும் சகல உலக ஆசீர்வாதங்களையும் தந்திருக்கிறார்.
அவர் தந்தவைகளை நாம் மற்றவர்களும் பெற, கொடுக்கிறவர்களாக செயல்பட கர்த்தர் விரும்புகிறார். நாம் தேவன் தந்ததை மற்றவர்களுக்கு கொடுக்கிறோமா? ஒரு தாலந்தை பெற்றவன் தன்னிடத்தில் வைத்துக் கொண்டது போல், புதைத்து வைத்திருக்கிறோமா? வேதத்திலே, கொடுக்கத் தெரிந்தவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாக, நண்பர்களாக, இருதயத்துக்கு ஏற்றவர்களாக மாறினார்கள். இவர்களில் ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது, யோசேப்பு, ஆதி அப்போஸ்தலர்கள் உள்ளனர் ரெண்டு காசு போட்ட பெண், ஐந்து அப்பம், இரண்டு மீன் கொடுத்த சிறுவன்.
வேதத்திலே வாங்கிக் கொண்டவர்களும், வாங்க முயற்சித்தவர்களும் பதுக்கி வைத்தது தேவனுக்கு எப்படித் தெரியும் என்று பொய் சொன்னவர்கள், எப்படி அழிந்தார்கள் என்று பார்க்கிறோம். இவர்களில் பிலேயாம், கேயாசி, அனனியா சப்பீராள் தம்பதியினர் உள்ளனர். சாபத்தீடானதை பதுக்கி வைத்த ஆகான். மத்தேயு 25 :31 - 46 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. நாம் இலவசமாய் கொடுக்கிறவர்களாய் இருந்தால் வலது புறத்திலுள்ள மக்களாக, நித்திய ஜீவனைப் பெறுவோம். கர்த்தர் அப்படிப்பட்ட கிருபையை நமக்குத் தந்தருள்வாராக. ஆமென்.
- Mr. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
ஊழியர் பயிற்சி முகாமிற்கு வந்த வடமாநில மிஷனெரிகள் தேவனுக்கென்று எழும்பி பிரகாசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864