Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.12.2024
Share:

By Village Missionary Movement

Monday, 09-Dec-2024

இன்றைய தியானம்(Tamil) 09.12.2024

 

TRY TEARS

 

"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்" - சங்கீதம் 126:5

 

இரட்சணிய சேனை என்கிற மாபெரும் ஊழிய இயக்கமானது வில்லியம் பூத் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அநேக தேசங்களில் பரவியது. மாபெரும் திரள் கூட்ட ஜனங்களை தேவன் சபைகளில் சேர்த்து பெரிய காரியங்களைச் செய்தார். இந்த ஊழியத்தில் மிகவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மிஷனெரி கடினமனமுள்ள ஜனங்களின் மத்தியில் ஊழியம் செய்ய அனுப்பப்பட்டார். ஆண்டுகள் சில சென்றன. அந்த ஜனங்கள் யாரும் மனம் திரும்பவேயில்லை. இவர் அங்கு வறுமையிலும் மிகுந்த தியாகத்துடன் துன்பங்களை சகித்து ஊழியம் செய்தார், ஆனாலும் பலனில்லை. மிகவும் சோர்ந்து போனார். அவர் வில்லியம் பூத் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் "நான் இங்கு நான்கு ஆண்டுகளாக ஊழியம் செய்கிறேன். என்னால் எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. இங்கு வந்த பிறகு என் மகனும் இறந்துவிட்டான். அவனை அடக்கம் செய்வதற்கு கூட நானும் என் மனைவியுமே இருந்தோம். யாரும் வரவில்லை. நான் காலத்தை வீணாக்குகிறேன் என்று தோன்றுகிறது. ஒரு ஆத்துமாவும் மனந்திரும்பவில்லை, ஒரு பலனையும் நான் பார்க்கவில்லை. நான் திரும்பி வர விரும்புகிறேன்" என்று எழுதியிருந்தார். வில்லியம் பூத் அவர்கள், சரி நீங்கள் வந்து விடுங்கள் என்று கடிதம் அனுப்புவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் பூத் அவர்கள் எழுதியதோ இரண்டு வார்த்தைதான் (TRY TEARS) "கண்ணீரோடு முயற்சி செய்" என்று எழுதியிருந்தார். இதை வாசித்த ஊழியர் மனமுடைந்து அந்த மக்களுக்காக அழுது ஜெபித்தார். மனக் கடினமுள்ள ஜனங்கள் திரளாய் இரட்சிக்கப்பட்டனர். ஒரு ஆத்துமா கூட இல்லையே என்று கலங்கின அவர் மூலம் அந்த தேசத்தில் 100 சபைகளை ஸ்தாபிக்க தேவன் உதவி செய்தார். எசேக்கியேல் தீர்க்கதரிசி தன்னுடைய புஸ்தகத்திலே எழுதும்போது நாட்டின் மக்களுக்காக பெருமூச்சு விட்டு அழுது தேவனிடம் பிரார்த்தனை செய்யும் மக்களின் நெற்றியில் தூதர்கள் அடையாளம் போடுவதாக தரிசனம் காண்கிறார். கண்ணீர் விட்டு அழுது ஜெபிக்கும் ஜனங்களை தேவன் எதிர்பார்க்கிறார். இந்த வேத பகுதியில் தன்னுடைய நாட்டில் நடக்கும் அநீதியான காரியங்களுக்காகவும், சகிக்க முடியாத பாவங்களுக்காகவும், மக்களின் மனந்திரும்புதலுக்காகவும் கண்ணீர் விட்டு அழும் தம்முடைய மக்களை தனியாகப் பிரித்து அவர்களை அடையாளப்படுத்துகிறார். அவர்களுக்கு தேவ பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசத்தின் அநீதியைக் கண்டும் ஜெபிக்காதவரை பார்த்து தேவன் சினங்கொள்கிறார். 

 

அருமையானவர்களே! கண்ணீரின் ஜெபம் என்பது மிகவும் வலிமையானது. ஒருவேளை நீங்கள் தனியொரு மனிதன், குடும்பம், தேசம் இவைகளின் இரட்சிப்புக்காக ஜெபித்து மாற்றத்தைக் காணாமல் சோர்ந்து போனீர்களோ? ( TRY TEARS) கண்ணீரோடு முயற்சி செய்யுங்கள். நம்முடைய கண்ணீர் துளிகளை தேவன் எண்ணி வைத்திருக்கிறார். அதற்குரிய பலனைத் தருவார். ஆமென்.

- Bro. மனோஜ்குமார்

 

ஜெபக் குறிப்பு: 

25000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் நம் ஊழியர்கள் சென்ற ஒவ்வொரு கிராமமும் கிறிஸ்துவுக்கு சொந்தமாக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet jojobet holiganbet bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş