Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.12.2024
Share:

By Village Missionary Movement

Sunday, 08-Dec-2024

இன்றைய தியானம்(Tamil) 08.12.2024

 

"…அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" - தானியேல் 12:3

 

SPECIAL STAR

 

என்ன குட்டீஸ், டிசம்பர் மாதம் வந்ததில் இருந்து ஒரே கொண்டாட்டம்தான். வீட்ல Star கட்ட, புது டிரஸ் எடுக்க, பட்டாசு வாங்கன்னு busy யா இருப்பீங்கதானே! சந்தோஷத்தில் அரையாண்டு தேர்வுக்கு படிக்காம இருந்து விடக் கூடாது. நல்லா படித்து Exam எழுதணும். O. K வா குட்டீஸ். இன்றைக்கு star நம்ம கூட பேச போகுது. என்ன? கேட்க ரெடி தானே!

   

நான் தான் star பேசுறேன். நான் ரொம்ப பிரைட்டா, அழகா இருக்கேனா? ஆமா இயேசப்பாவோட படைப்பு எல்லாமே Super தான். நீங்க கூட எவ்வளவு அழகா இருக்கீங்க. Jesus என்னை படைத்தபொழுது ரொம்பவே வித்தியாசமா படைச்சாங்க யாருக்கும் தெரியாம ஸ்டோர் ரூம்ல வைச்சிட்டாங்க. எனக்கு அப்பொழுதெல்லாம் கவலையா இருக்கும். ஜன்னல் வழியா இரவு நேரத்தில் நட்சத்திரங்களை பார்க்கும்போது அழகா ஜொலிக்கும் நானும் அவர்களைப் போல மின்னுவேனே, என்னை மட்டும் மறைத்து வச்சிருக்காங்களேன்னு நினைக்கும் போதே அழுகையா வந்துடும் என்னைப் போல நீங்களும் வேலையா இருக்கீங்களா? Don’t worry ஒரு நல்ல செய்தி சொல்றேன். ஒரு நாள் என்னை வெளியே விட்டாங்க. என்னை பரலோகமே கொண்டாடினது. தேவதூதர்கள் எல்லாரும் என்னை பார்த்துக் கொண்டே இருந்தாங்க. என்னதுன்னு பார்த்தா இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பாலகனாய் பிறந்தார் என்பதை தெரியப்படுத்ததான் என்னை அனுப்பியிருக்காங்க. Jesus ஐ பாலகனாய் கண்ட எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு மட்டுமா உங்களுக்கும் தானே சந்தோஷம். அது மட்டுமா வானத்து நட்சத்திரங்களை ஆராய்ச்சி பண்றவங்களும் என்னை பார்த்து ஆச்சரியப்பட்டாங்க குட்டீஸ். புதிதாய் பிறந்த என்னைக் கண்டதும் யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை கண்டு பிடித்து, அவரைப் பணிந்து கொள்ள புறப்பட்டாங்க. வழிகாட்டும் படி போன என்னை மறந்து ராஜா அரண்மனையில் பிறந்திருப்பார் என்று நினைத்து அரண்மனைக்கு சென்றார்கள். வெளியே வந்த அவர்களுக்கு நான் வழிகாட்டி, இயேசு பிறந்த இடம் வரைக்கும் அழைத்து வந்தேன். இயேசு பாலகனுக்கு பரிசு கொடுத்து, அவரை தொழுது கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பினார்கள். நான் விசேஷமாய் படைக்கப்பட்டதே இயேசு பிறந்த இடத்தை காண்பிக்க என்பதை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். 

 

அதே போல குட்டீஸ் நீங்களும் இயேசப்பாவோட சாயலில் விசேஷமாக படைக்கப்பட்டிருக்கிறீர்கள். இன்றைக்கும் இயேசுவை தெரியாமல் பாதை மாறி போகின்றவர்கள் ஏராளம். அவர்களுக்கு இயேசுவைக் காட்டுகின்ற வழிகாட்டியாய் நீங்க இருக்கணும்னு ஆசைப்படுகிறேன். குட்டீஸ் நீங்களும் என்னைப்போல ஜொலிக்கின்ற ஸ்டாராய் இயேசுவை பிரதிபலிக்க என் வாழ்த்துக்கள். Bye. 

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş