Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.11.2024 (Gospel Special)
Share:

By Village Missionary Movement

Monday, 25-Nov-2024

இன்றைய தியானம்(Tamil) 25.11.2024 (Gospel Special)

 

கோதுமை மணி

 

"…கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்" - யோவான் 12:24

 

கோதுமையின் பயன் என்ன? ஒன்று அது உணவாகும் இல்லையேல் விதையாகும். ஆம், ஒரு விதை அழிந்து பல புதிய மணிகளை கொடுக்கும். சுவிசேஷத்திற்காக தங்களை மரிக்கவும் ஒப்புக்கொடுப்பவர்களை வேதம் கோதுமை மணிக்கு ஒப்பிடுகிறது.

    

 ஜேம்ஸ் சால்மர்ஸ் என்ற மிஷனெரி தம்பதியினர் ஆஸ்திரேலியாவுக்கு வட பகுதியிலுள்ள நியூகினியா என்ற தீவிற்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி சென்றனர். அத்தீவின் மனிதர்கள் மனித மாமிசம் உண்பவர்கள் என்று அறிந்தும் தேவ அன்பினால் நிரப்பப்பட்டு தைரியமடைந்தவர்களாக அம்மக்களைத் தேடிச் சென்றனர். கிறிஸ்துவின் அன்பை அங்கிருந்த 105 க்கும் அதிகமான சிறுசிறு தீவு மக்களுக்கு அறிவித்தனர். சுமார் 90 தீவுகளுக்கு முதன் முறையாக சுவிசேஷம் சொன்ன வெள்ளை மனிதர் இவரே. தன்னுடைய நண்பர் ஒலிவர் டோம்கின்ஸ் என்பவருடன் 1901 -ம் ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ம் நாள் ஈஸ்டர் ஞாயிறு அன்று கோரிபாரி என்னும் தீவிற்கு சென்றனர். உற்சாகமாய் வரவேற்பு அளித்தனர் அப்பழங்குடியினர். இவர்களின் வரவேற்பு உண்மை என நம்பி மகிழ்ச்சியோடிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் தாக்கப்பட்டனர். சில நிமிடங்களில் அவர்கள் உடல்கள் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு, கொதிக்கும் குழம்பில் போடப்பட்டது. அம்மக்களுக்கு இருவரும் உணவாயினர்.     

 

வேதத்திலும் அநேக பரிசுத்தவான்கள், ஆதி அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவினிமித்தமாய் இரத்த சாட்சிகளாய் மரித்தனர். முதல் இரத்த சாட்சி ஸ்தேவான், கல்லெறியப்பட்டு மரித்தார் (அப். 7:60) எபிரேயர் 11: 36, 37 ல் விசுவாச வீரர்கள் பட்டியலில் சிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், காவலையும் அனுபவித்தார்கள், கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தாலே வெட்டப்பட்டார்கள். அப்பப்பா... அந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது. இன்று வரையிலும் தேவமனிதர்கள் சுவிசேஷத்திற்காக கோதுமை மணிகளாக விதைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர். 

 

ஆம், பிரியமானவர்களே, அன்று போலவே இன்றும் பல உலக நாடுகளில் சுவிசேஷம் அறிவிக்க செல்வது உயிருக்கே ஆபத்தாக கூட உள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் கேள்விப்படும்போது முன்னேறிச் செல்ல தயங்குகிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை சுவிசேஷத்தை அறிவிக்க அனுப்பும்போது, அவர்களைப் பார்த்து, உங்கள் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10: 28) என்று கூறி அனுப்பினார். ஆண்டவர் எப்படி தம்முடைய சீஷர்களை தைரியப்படுத்தி அனுப்பினார் பாருங்கள். ஆம், நாமும் தைரியமாய் சுவிசேஷம் அறிவிக்க புறப்படுவோம். அவருடைய சித்தமில்லாமல் தலைமுடியே கீழே விழாதென்றால், தலையா விழுந்து விடப் போகிறது! அழைத்தவர் நம்மோடிருக்கிறார். பயப்படவேண்டாம்.

- Sis. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு:

நாம் நடத்திய வாலிபர் முகாம்களில் பங்கு பெற்ற வாலிபர்கள் தேவனுக்கென்று வைராக்கியமாய் ஜீவிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş