By Village Missionary Movement
Sunday, 24-Nov-2024இன்றைய தியானம்(Tamil) 24.11.2024 (Kids Special)
SHINNING STAR
"...அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" - தானியேல் 12:3
சண்டே என்றாலே சந்தோஷம் தான். ரொம்ப ஜாலியா சந்தோஷமா இருப்பீங்கல்ல? O.k. அந்த சந்தோஷத்தோட ஒரு உண்மை சம்பவத்தை கேட்போமா? இங்கிலாந்து தேசத்தில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஜான் டக்கர், சாரா டக்கர். இந்த சாரா டக்கருக்கு மற்ற பிள்ளைகளைப் போல் ஓடி ஆடி விளையாடவோ, ஸ்கூலுக்கு போகவோ முடியாது. வீல்சேரில் அமர்ந்தபடிதான் இருப்பார்கள். வீட்டில் இருந்தே கல்வி கற்றுக் கொண்டாள். ஆலயத்திற்கு மட்டும் வீல்சேரில் அமர்ந்தபடி அவள் பெற்றோர் அழைத்துச் செல்வார்கள். சாரா டக்கருக்கு 20 வயதாகும் போது, ஜான் டக்கரும் வளர்ந்து இருப்பாங்க தானே! இந்தியாவில் உள்ள பாளையங்கோட்டை பகுதியிலே மிஷனெரியாக பணியாற்றும்படி வந்தார். அப்போதெல்லாம் போன் கிடையாது. உங்கள் கையில் எப்போதும் போன் இருக்கிறது. அதுவும் லீவு நாட்களில் போனை கீழே வைக்கவே மனசு வராது, அப்படித்தானே குட்டீஸ். போன் மூலமா எத்தனையோ சிறுவர்கள் கண்பார்வை இழந்து இருக்கிறார்கள் தெரியுமா? நீயும் கவனமாக இரு பெற்றோர் சொல்வதைக் கேள் அளவோடு யூஸ் பண்ணு O.k.வா.
ஜான் டக்கர் தன் தங்கைக்கு கடிதம் எழுதுவது வழக்கம். அப்படி எழுதும்போது, இந்தியாவில் பெண்கள் படிக்க செல்வதே கிடையாது, குழந்தையிலேயே திருமணம் செய்து கொடுக்கிறார்கள், பெண்கள் படிப்பது குடும்பத்திற்கு அவமானம் என்று நினைக்கிறார்கள் என்று கடிதம் எழுதி அனுப்பினார். அண்ணனின் கடிதத்தை வாசித்த சாரா டக்கர் தன் அறைக்கு சென்று பாரத்தோடு அழுது ஜெபித்தார். "இந்தியாவிற்கு சென்று பெண்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க ஆசை ஆனால் நான் ஊனமாக இருக்கிறேனே" என்று சும்மா இருக்காமல், யோசித்தாள். தன் நகையை விற்று பணமாக்கினாள், தன் உறவினர்களிடம் பேசி உதவி செய்யும்படி கேட்டாள். தனது பிறந்தநாளுக்கு பரிசு தருவோரிடம் பரிசு வேண்டாம் என்று சொல்லி பணம் வாங்கிக் கொண்டாள். மொத்த பணத்தையும் அண்ணனுக்கு அனுப்பி வைத்து, பாளையங்கோட்டை பகுதியில் பெண் குழந்தைகளுக்கு படிக்க ஸ்கூல் ஒன்றை ஆரம்பிக்க பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டாள். ஸ்கூல் அதன் பின்பு கல்லூரி ஒன்றையும் கட்டினார்கள் அதுதான் இந்நாள் வரைக்கும் சாரா டக்கர் கல்லூரியாய் பாளையங்கோட்டையில் உள்ளது.
அருமையான குட்டிச் செல்லங்களே, தன் குறைய நினைத்து சோர்ந்து போகாமல் சாதிக்க நினைத்த சாதனைப் பெண் தான் சாரா டக்கர். சாராவை போல நீயும் shine பண்ண வேண்டும் என்று நினைக்கிறாயா? உன் குறைவை மறந்து மற்றவரின் குறைவை நினைத்து நன்மை செய்து பார். நீயும் ஜொலிக்கும் ஸ்டாராய் மாறுவது அதிக நிச்சயம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864