Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.11.2024 (Gospel Special)
Share:

By Village Missionary Movement

Wednesday, 20-Nov-2024

இன்றைய தியானம்(Tamil) 20.11.2024 (Gospel Special)

 

நற்செய்தி அறிவித்தல்

 

"…நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்" - யோவான் 4:14

 

கனடா தேசத்தில் ஒரு அனாதை சிறுவன் இருந்தான். அவனுக்கு உணவு மற்றும் ஆடைகள் இல்லாமல் கஷ்டப்பட்டான். அவனை ஒரு சபை போதகர் பராமரித்து வந்தார். ஒரு நாள் அவர் அந்த சிறுவனிடம் சில ட்ராக்ட்ஸ் கொடுத்து, "இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்" என்று சொல்லி பார்க்கிறவர்களிடம் எல்லாம் இதனை கொடுத்துவிட்டு வா. இருள் சூழும் முன் வந்துவிடு என்று சொல்லி அனுப்பினார். அந்த சிறுவனும் கொடுத்து வந்தான். ஒரே ஒரு ட்ராக்ஸ் மட்டும் இருந்தது. யாரிடம் கொடுப்பது என்று காத்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு வீட்டைப் பார்த்தான். அந்த வீட்டுக் கதவை தட்டிக் கொண்டே இருந்தான். அந்த வீட்டில் ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு யாரும் கிடையாது. தனிமையில் இருந்த அவள் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாள். அந்த சமயத்தில் தான் அந்த சிறுவன் அவ்வீட்டு கதவை விடாமல் தட்டிக் கொண்டிருந்தான்.   

 

அவள் மிக கோபமாக வந்து கதவை திறந்தாள். அப்போது அச்சிறுவன் அழகான புன்னகையோடு "அம்மா, இயேசு கிறிஸ்து உங்களை மிகவும் நேசிக்கிறார்" என்று சொல்லி கைப்பிரதியைக் கொடுத்து விட்டு ஓடிப்போய்விட்டான். அவளும் கதவை அடைத்து விட்டு அந்த ட்ராக்ஸ் -ல் என்ன சொல்லி இருக்கிறது என படிக்க ஆரம்பித்தாள். அதில் இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள சபைக்கு வாருங்கள் என்று எழுதி இருந்தது. தற்கொலை எண்ணத்தை கைவிட்டாள் அந்த பெண். மறுநாள் மகிழ்ச்சியுடன் சபைக்கு சென்று இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதாக சாட்சி கூறினாள்.   

 

அந்த சிறுவன் மூலமாக வந்த நற்செய்தி ஒரு உயிரைக் காத்து இரட்சிப்புக்குள் வழி நடத்தியது. அது போல யோவான் 4 : 6 - 30 வசனங்களில் சமாரியா ஸ்திரீயிடம் இயேசு கிறிஸ்து பேசி அவளுடைய காரியங்கள் அனைத்தையும் சொல்லி, அவளிடம் பேசுவது மேசியா என்பதை அவளுக்கு தெரிவித்தார். அவளும் மகிழ்ச்சியோடு தன் ஊருக்குள் ஓடி சென்று இயேசு கிறிஸ்துவை பற்றி சொன்னாள். அவ்வூராரை இரட்சிப்புக்குள் வழி நடத்தினாள். அதுபோல நாமும் நமக்கு ஆண்டவர் செய்த நன்மைகளை நமக்குள்ளே வைத்திருக்காமல் அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் சொல்ல வேண்டும். இயேசு நல்லவர் என்றும், அவருடைய அன்பு நிபந்தனையற்றது என்றும் சொல்லி மக்களை இரட்சிப்புக்குள் வழி நடத்த வேண்டும். இதனை நாம் செய்வதற்கு நாம் தேவனை நோக்கி நமக்கு கல்விமானின் நாவைத் தரும்படி கேட்போம். நற்செய்தி கூறுவோம்.  

- Mrs. ஷீலா ஜான்

 

ஜெபக்குறிப்பு: 

கண்மணியே கேள் என்ற வாலிப பெண்களுக்கான நிகழ்ச்சி மூலம் அனேக வாலிப பெண்கள் கர்த்தருக்காக எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş