Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.11.2024 (Gospel Special)
Share:

By Village Missionary Movement

Tuesday, 19-Nov-2024

இன்றைய தியானம்(Tamil) 19.11.2024 (Gospel Special)

 

அற்பமான வாலிபன்

 

"இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;…" - மத்தேயு 18:10

 

ஒரு இளம் வாலிபனை ஞாயிறு பள்ளி ஆசிரியர் இரட்சிப்பிற்குள் வழிநடத்தினார். அவனால் வேதத்திலுள்ள எளிய வசனத்தைக் கூட மனனம் செய்ய முடியவில்லை. ஞாயிறுப்பள்ளி பிள்ளைகள் சிரித்தனர். ஆனால் அந்த ஆசிரியர் அவனை உற்சாகப்படுத்தியதால் சபையின் அங்கத்தினராக விரும்பினான். அதற்கான வாய்மொழித் தேர்வில் நடுக்கத்துடன் காணப்பட்ட இந்த வாலிபனுக்கு, உறுப்பினராகும் வாய்ப்பு தடுக்கப்பட்டது. 19 ஆம் வயதில் சிக்காகோவுக்கு இரயிலில் ஏறிச்சென்று செருப்புக் கடையில் விற்பனையாளன் ஆனான். தனது 23 ஆம் வயதில் கர்த்தருக்கென்று முழு நேர ஊழியம் செய்யத் தீர்மானித்தான். 1500 பிள்ளைகள் கொண்ட ஞாயிறு பள்ளியை நடத்தினான். தனது 28 ஆம் வயதில் இளம் வாலிபர் கிறிஸ்தவ இயக்கத்தின் (Y.M.C.A) தலைவராய் பொறுப்பேற்றான். சிக்காகோவில் இரண்டு ஆலயங்களை நிறுவினார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு சுமார் 5 கோடி மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்தான். அந்த வாலிபன் தான் D.L மூடி என்ற பிரசித்தி பெற்ற அமெரிக்க போதகர். அமெரிக்காவில் பைபிள் காலேஜை முதன் முதலில் நிறுவியவரும் இவரே ஆவார். 

 

தேவன் பயன்படுத்தும் பாத்திரங்கள் உலகத்தின் பார்வைக்கு பெலவீனமானவர்களாக, அற்பமாய் எண்ணப்பட்டவர்களாக இருக்கலாம்! தேவன் அவர்களைக் கொண்டு பெரிய பலத்த காரியங்களைச் செய்கிறார். அதனால் நாம் யாரையும் அற்பமாக எண்ணக்கூடாது. சிறு பிள்ளைகள் தானே இவர்கள் வளர்ந்து வந்து ஆண்டவரை ஏற்றுக்கொள்ளட்டும் என எண்ணாமல் அவர்களை முழு மனிதர்களாக, முழு ஆத்துமாவாக எண்ணி சுவிசேஷம் அறிவியுங்கள். சிறு வயதிலேயே சுவிசேஷம் அறிவித்தால் வாழ்வின் துவக்கத்திலேயே இயேசுவை அறிந்து ஏற்றுக் கொள்வர். வாழ்நாள் முழுவதும் அவருக்காக வாழ்வர். அவர்கள் படிப்பில் குறைந்திருக்கலாம், திறமை இல்லாதவர்களாக இருக்கலாம், நல்ல தோற்றம் இல்லாமல் இருக்கலாம், சரியான ஆடை இல்லாமல் எளியவர்களாக இருக்கலாம், எதைக் கண்டும் அவர்களை புறக்கணியாமல் சுவிசேஷம் அறிவியுங்கள். அவர்கள் தான் நாளைய சமுதாயத்தின் தூண்கள். அவர்கள் மூலம் பெரிய காரியங்களைச் செய்ய தேவன் வல்லவராய் இருக்கிறார்.    

 

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் (பிர. 11:1) என வேதம் கூறுகிறது. பலனை உங்கள் கண்கள் முன்பாக உடனே காணா விட்டாலும் நீண்ட நாட்களுக்கு பின் இந்த உலகம் உங்களைப் பற்றி பேசும். ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியர் அந்த வாலிபனை ஆண்டவருக்குள் வழி நடத்தியதன் மூலம் D.L மூடி என்ற பிரசித்தி பெற்ற ஊழியர் உருவாகி உள்ளார். அப்படிப்பட்ட ஞாயிறு பள்ளி ஆசிரியராக நீங்கள் ஏன் இருக்கக் கூடாது? நீங்கள் வழிநடத்தும் வாலிபர்கள் D.L மூடியாக, பில்லி கிரஹாமாக உருவாகுவார்கள் என விசுவாசித்து அறிவியுங்கள். பரலோக பலனைப் பெறுங்கள்.

- Bro. சிவா பழனிச்சாமி

 

ஜெபக்குறிப்பு:

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 500 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş