Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.11.2024 (Gospel Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 09-Nov-2024

இன்றைய தியானம்(Tamil) 09.11.2024 (Gospel Special)

 

கர்த்தருக்கு ஊழியம் செய்

 

"நீயோ... சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று" - 2 தீமோத்தேயு 4:5

 

இயேசு கிறிஸ்து, பரத்திற்கு ஏறுமுன் கொடுத்த கடைசி பிரதான கட்டளை, "உலகெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவியுங்கள்" என்பதே! தேவன் தேவதூதர்களுக்கு கொடுக்காத வேலையை அவருடைய பிள்ளைகளான நம்மை நம்பிக் கொடுத்திருக்கிறார். "உனக்கெல்லாம் ஊழியம் செய்யத் தகுதியில்லை, செய்தாலும் பலனில்லை, உன்னால் முடியாது" என்றெல்லாம் பல பொய்களை அள்ளிவிடுவான் பிசாசு. பிரியமானவர்களே! நம் தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. தேவன் பேரிலும், ஆத்துமாக்கள் பேரிலுமான அன்போடும், விசுவாசத்தோடும், தேவகட்டளைக்குக் கீழ்படியவேண்டும் என்ற வாஞ்சையோடும், ஜெபத்தோடும் சுவிசேஷ ஊழியம் செய்ய ஆரம்பித்தால், நாம் அல்ல, பரிசுத்த ஆவியானவரே நம்மோடு இருந்து செயலாற்றுவார். பலன்களை நிச்சயமாகக் காண்போம்!

         

ஒரு சாட்சி. புற மார்க்கத்தில் தீவிரமாக இருக்கும் ஓர் வசதி மிக்க வியாபாரி, ஈரோட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு வருவார். அடிக்கடி தன் பிரச்சனைகளையும், வியாதிகளையும் பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்வார். ஒரு நாள் ஒரு கைப் பிரதியை கொடுத்தேன். பின்னர் ஜெபித்து வந்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்தவர், "கைப்பிரதியை வாசித்தபின் உங்கள் தெய்வம் தான் உண்மையானவர் என்பதை அறிந்து கொண்டேன். என் உள்ளத்தில் மிகுந்த சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய கோவில்களுக்கு செல்வதையெல்லாம் நிறுத்தி விட்டேன்" என்று மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஓர் ஆத்துமா இயேசுவை அறிந்து கொண்டது! அல்லேலூயா!

           

 மற்றொரு சாட்சி, எங்கள் வீட்டிற்கு தர்மம் எடுக்க வரும் ஓர் முதிர் வயதான புறமார்க்க பெண் வரும்போதெல்லாம், சுவிசேஷம் அறிவித்து, சிறு ஜெபங்கள் செய்யக் கற்றுக் கொடுத்தேன். விரைவில் இயேசுவை ஏற்றுக் கொண்ட அப்பெண்ணின் வாழ்க்கையில் ஒரு சில வாரங்களிலேயே பல அற்புதங்கள் நடந்து, ஒர் கிறிஸ்தவ முதியோர் இல்லத்தில் யார் மூலமாகவோ தங்க இடமும் கிடைத்தது. கர்த்தருடைய கிருபை பெரியது!

     

 பிரியமானவர்களே! கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. (1 கொரி 15 : 58) " உந்தனுக்கே, ஊழியம் செய்யத் தந்தேன் என்னைத் தாங்கியருளும் " என்ற பாடல் வரிகளோடு, நீங்கள் இருக்கிற இடத்தில் சுவிசேஷம் அறிவிக்க இப்பொழுதே உங்களை அர்ப்பணித்து விடுங்கள்.

-Mrs. கீதா ரிச்சர்ட்

 

ஜெபக்குறிப்பு: 

25000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்திற்கு சுமூகமான கால சூழ்நிலை இருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al