Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  02-05-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 02-May-2021

இன்றைய தியானம்(Tamil)  02-05-2021 (Kids Special)

ஸ்வெட்டரின் விலை என்ன? 

“அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” – 2 கொரிந்தியர் 9:7 

என்ன குட்டீஸ் எப்படி இருக்கிறீங்க, இன்றைக்கு Churchக்கு போனீங்களா?  Sunday School எல்லாம் attend பண்ணீங்களா? ஜாலியா இருந்ததா, உங்களைப் போலத்தான் ஐசக் என்ற தம்பியும் Churchக்குப் போனான். Churchல Pastor கொடுத்த செய்தியை கவனமாகக் கேட்டான். அன்றைக்கு மற்றவர்களுக்கு கொடுப்பதை பற்றி  Pastor பல உண்மை சம்பவங்களோடு Message கொடுத்தாங்க, அதுமட்டுமல்லாது பக்கத்து ஊரிலுள்ள முதியோர் இல்லத்திற்கு போய் அங்குள்ள வயசானவங்க எல்லோருக்கும் போர்த்திக்கொள்ள 200 போர்வை நம்ம சபையில் இருந்து வாங்கிக் கொடுக்கலாம் என நினைக்கிறேன். விரும்புகிறவர்கள் நீங்கள் உதவலாம் என்று சொல்லி ஒரு பெரிய அட்டைப்பெட்டியை முன்பாக கொண்டு வந்து வைத்தார். 

சபை மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை அந்த பெட்டியில் போட்டார்கள். ஒரு சிலர் சில்லறை பைசாவை தேடிப் போட்டார்கள். ஐசக்கோ இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையே என்ற ஏக்கம் அவனுக்குள் வந்தது. யோசித்துக்கொண்டே வீட்டிற்கு சென்றான். சில நாட்களுக்கு முன்பு அப்பா தனக்கு வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டரை எடுத்து இயேசப்பாவிடம், “இயேசப்பா, எங்கிட்ட இருக்கிற புதுசு இதுமட்டும்தான்” என்று கூறிவிட்டு, அதை போதகரிடம் கொடுத்து, “இதை யாராவது தாத்தா, பாட்டிக்கு கொடுங்கள், எனக்கு இயேசப்பா நிச்சயமாக வேறே தருவார்” என்று சந்தோஷத்துடன் சொன்னான். சபையாரில் சிலர் அவனைப் பார்த்து சிரித்தார்கள். அதில் ஒரு Uncle மட்டும் இந்த ஸ்வெட்டரை நான் ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கிறேன் என்றார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 2000, 3000 என்று ஏலம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதில் ஒரு டாக்டர் 1 இலட்சம் ரூபாய்க்கு அந்த ஸ்வெட்டரை ஏலம் எடுத்தார். செக்கை பாஸ்டரிடம் கொடுத்துவிட்டு ஸ்வெட்டரை ஐசக்குக்கே அன்பளிப்பாக கொடுத்தார். முதியோர் இல்லத்திற்கு 200 போர்வை, தலையணை, நைட்டி, வேஷ்டி, சட்டை வாங்கினது போக எழுபதாயிரம் ரூபாய் மிச்சமிருந்துச்சு. இதை என்ன செய்யலாம் என்று யோசித்த சபை மக்களும், போதகரும் ஐசக் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்தாலும் அவனுக்கிருக்கும் கொடுக்கும் நல்ல குணத்தைப் பாராட்டி, இந்த எழுபதாயிரத்திற்கு ஒரு ரூமும், டாய்லெட், பாத்ரூமும் கட்டிக்கொடுக்க தீர்மானம் பண்ணினார்கள், அதுமட்டுமல்லாது ஒரு building காண்ட்ராக்டர் எழும்பி கையிலிருக்கிற இந்த எழுபதாயிரத்திற்கு மேலே எவ்வளவு செலவு ஆனாலும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். 

அன்பான குட்டி தம்பி தங்கச்சி, இந்த குட்டி தம்பியை போல் நீயும் உற்சாகமாய் கொடுக்கும்போது இயேசப்பா உனக்கும் பல மடங்கு திரும்ப தருவார்.
-    Mrs. ஜாஸ்மின்பால் பாண்டித்துரை

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş amgbahis amgbahis giriş casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ grandpashabet jojobet jojobet giriş Hiltonbet Hiltonbet giriş Hiltonbet güncel Hiltonbet jojobet alobet alobet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş jojobet jojobet giriş