Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.10.2024
Share:

By Village Missionary Movement

Friday, 25-Oct-2024

இன்றைய தியானம்(Tamil) 25.10.2024

 

பாக்கியவான்கள்

 

"கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" - சங்கீதம் 1:2

 

அமெரிக்காவில் நாத்திகர்களுக்கான கூட்டம் ஒன்றை தன் நண்பர் ஒருவர் கூட்டுவதை அறிந்த அவரது நண்பர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நண்பா! பிறப்பிலே நீ கிறிஸ்தவனாய் இருந்தும் நாத்திகர்களுக்கான கூட்டத்தை நீ தலைமை தாங்கி நடத்துவதை அறிந்து வேதனைப்படுகிறேன்", என்றார். அதற்கு அந்த நாத்திக நண்பர், "நண்பா! நீயும் வா நான் எதற்காக நாத்திகன் ஆனேன் என்பதை விவரிப்பேன்" என்றார். கிறிஸ்தவ நண்பனும், நாத்திக நண்பனை நேரில் கண்டு பேசுவதற்காக சென்றார். நாத்திக நண்பர், நாத்திக கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்த வேதாகமத்தை தன் நண்பரை கண்டவுடன், எல்லா நாத்திக புத்தகத்தின் அடியில் வைத்துவிட்டு, நண்பா! நான் மேலிருந்து கீழாக புத்தகங்களை அடுக்கியிருக்கிறேன். மேலே உள்ள நாத்திக புத்தகம் தான் தலை சிறந்தது என்றார். கிறிஸ்தவ நண்பர் கூறினார் நண்பா! நீர் அடுக்கியது சரியே, எல்லா புத்தகங்களும் வேதாகமத்தை அஸ்திபாரமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது என்றார். உடனே நாத்திக நண்பர் கீழே உள்ள வேதாகமத்தை மேலே வைத்தார். உடனே நாத்திக நண்பரைப் பார்த்து கிறிஸ்தவ நண்பர் கூறினார், "வேதாகமத்தின் மகத்துவத்தைப் பார்த்தீரா, ஒரு நொடி பொழுதில் எல்லா புத்தகங்களுக்கும் மேலாக முதன்மையான புத்தகமாக வேதாகமம் இருக்கிறதை நீரே ஒப்புக்கொண்டு வைத்துள்ளீர்" என்றார்.

    

நாத்திக நண்பர், கிறிஸ்தவ நண்பனின் வேத அறிவை காட்டிலும் உலக அறிவையும் பேச்சுத் திறமையையும் அறிந்து, தன் நாவை அடக்கிக் கொண்டு, "நான் தோற்றேன் நான் தோற்றேன்" என்று சொல்லி நாத்திக கூடுகையை ரத்து செய்தார். வேதம் தன் நண்பனை அசைத்ததை எண்ணி, கிறிஸ்தவ நண்பர் அகமகிழ்ந்தார்.  

 

வேதத்தின் மகத்துவம் ஆராய்ந்து முடியாது. வேதத்தின் அஸ்திபாரத்தில் நம் வாழ்க்கை கட்டப்படுமென்றால், அது அசையாததாய் உலக ஆசையால் தகர்க்கமுடியாததாய் காணப்படும். ஆகவே உங்கள் வாழ்வு வேத சத்தியத்திற்கு கீழ்ப்படிந்ததாய் இருக்கட்டும். வேதம் சொல்லுகிறது கடைசி நாட்களில் கர்த்தருடைய வசனம் கிடைக்காத பஞ்ச நாட்கள் வரும். உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருக்கிறது என எரேமியா தீர்க்கதரிசி கூறுகிறார். நாமும் வேதத்தை நேசிப்போம், அனுதினமும் கருத்தாய் வாசிப்போம், தேவனுடைய வார்த்தையை சுமக்கும் பாக்கியம் பெறும் கழுதையாக மாறுவோம். பெருமிதம் கொள்வோம். ஆமென்.

- S. சாமுவேல் மோரீஸ்

 

ஜெபக்குறிப்பு:

கைப்பிரதி ஊழியத்தின் மூலம் கைப்பிரதியைப் பெற்றவர்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al