By Village Missionary Movement
Thursday, 24-Oct-2024இன்றைய தியானம்(Tamil) 24.10.2024
அனைவரும் சமம் அவர் பார்வையில்
"உங்கள் தேவனாகிய கர்த்தர்... வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல,…" - உபாகமம் 10:17
அஜய், ஒரு பெயர் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.B.A பட்டம் பெற்று தன் வாழ்வில் உன்னத நிலையை அடையும் பொருட்டு சிறந்த வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கர்த்தர் அவனை தம்முடைய சுவிசேஷப் பணியை ஒரு கிராமத்தில் செய்யும் பொருட்டு அழைத்தார். அனேக மனப்போராட்டங்களுக்குப் பிறகு அஜய் கர்த்தரின் அழைப்பிற்கு கீழ்ப்படிந்தான். இவனுடன் ஊழியம் செய்யும் கிளெமெண்ட் என்ற பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து கட்டிடத் தொழில் செய்தவன் நியமிக்கப்பட்டான்.
தாங்கள் இருவரும் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்ற எண்ணம் அஜய்க்கு ஏற்பட்டது. தான் ஒரு சரியான தீர்மானம் செய்ததாகத் தோன்றவில்லை. "மிகப்பெரிய கல்வித் தகுதி பெற்ற நான் சரியான கல்வி தகுதி இல்லாத கிளெமெண்ட்டோடு சேர்ந்து கிராம ஊழியம் செய்வது எனக்குத் தகுதியில்லை" என நினைத்தான். "நான் ஏன் வேதாகம கல்லூரியில் பட்டப்படிப்பு பெற்று சிறந்த கல்விமான்கள் மத்தியில் ஊழியம் செய்யக்கூடாது" என நினைத்து ஆண்டவரின் சித்தத்தை அறியும் பொருட்டு முழங்காலில் நின்று அவர் சித்தம் வெளிப்படுத்தும்படி ஜெபித்தபோது, ஆண்டவர் பேதுருவையும், பவுலையும் அஜய் முன் காண்பித்தார்.
பேதுரு சாதாரண மீன் பிடிப்பவன். பவுலின் கல்வித் தகுதி கிட்டத்தட்ட பல்கலைக்கழக பல பட்டப்படிப்பு படித்தவர்களுக்குச் சமமானது. இருவரிடத்திலும் அநேக வேறுபாடுகள் உண்டு. இருந்தாலும் இருவரும் ஒரே இரட்சிப்பைப் பெற்றவர்களாய், ஒரே சுவிசேஷத்தை அறிவித்தனர். ஒருவேளை பேதுருவுக்கு பவுலின் கல்வித் தகுதிகள், பெற்ற பட்டங்கள் குறித்து தனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை பெற்றிருக்கலாம். அதைப்போல் பவுலும் பேதுரு இயேசுவுடன் நேரடியான நெருக்கத்தைக் கண்டு பொறாமைப் பட்டிருக்கலாம். ஆனால் படிக்காத பேதுரு கூட சில சூழ்நிலைகளைப் பவுலை விட புரிந்து நடந்திருக்கலாம். உயர்வானதோ, தாழ்வானதோ எல்லா எண்ணங்களும் கர்த்தரிடமிருந்து வெளிப்பட்ட சமமான இரக்கத்திற்கு முன் ஒன்றுமில்லாமற்போனது.
யூதமார்க்க வைராக்கியத்தோடு கிறிஸ்தவர்களை கொடூரமாய் வதைத்த பவுல் கர்த்தரின் தாழ்மையான ஊழியனாய் மாறினதைப் போல, சந்தேகப்படுகின்ற அவசரபுத்தியுள்ள படிக்காத பேதுருவும் முதன்மையான அப்போஸ்தலர்களில் ஒருவனானான். ஆகவே நாம் அனைவரும் கடவுளின் திராட்சைத் தோட்டத்தில், ஒரே உடன் ஊழியர்கள் தான் என்பதை அஜய் அறிந்து கொண்டான். வெற்றிகரமாய் ஊழியத்தில் முன்னேறினான். ஆண்டவரே! உலக அந்தஸ்துகளை உதறித் தள்ளிவிட்டு உடன் ஊழியர்களோடு சேர்ந்து உற்சாகமாய் ஊழியம் செய்ய கிருபை தாரும்!
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபகுறிப்பு:
Arise Joshua & Esther திட்டத்தில் அனைத்து ஊழியர்கள் மற்றும் போதகர்களின் பிள்ளைகள் இணைக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864