Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.10.2024
Share:

By Village Missionary Movement

Monday, 21-Oct-2024

இன்றைய தியானம்(Tamil) 21.10.2024

 

முழங்கால் ஜெபம்

 

"...அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான்" - அப்போஸ்தலர் 20:36

 

ஒரு மிஷனெரி நிறுவனமானது, மிஷனெரி ஒருவரை குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியது. உற்சாகமாக சென்ற அவர் அங்கு ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்கள் பல உருண்டோடின. எவரும் இவரது போதனைக்கு செவி சாய்க்கவில்லை. மக்கள் மிகவும் முரட்டாட்டமிக்கவர்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். இவர் தினமும் இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலரை கூட மாற்ற முடியவில்லை. எனவே மிகவும் சோர்வுற்றவராக, தனது எல்லா முயற்சியும் பயனற்று போய்விட்டதே என்று நினைத்தவராக பட்டணத்தின் இன்னொரு பகுதிக்கு வந்தார். அங்கு சாலை அருகில் பாறைகளை உடைக்கும் ஒருவரை பார்த்தார். பெரிய பெரிய பாறைகளை அவர் சம்மட்டியால் உடைத்துக் கொண்டிருந்தார். ஊழியர் அவரிடம் சென்று, ஐயா உங்களால் எப்படி இவ்வளவு பெரிய கடினமான பாறைகளை உடைக்க முடிகிறது? என்று கேட்டார். அதற்கு அவர் கடினமான பாறையை உடைக்கும்போது முழங்காலில் நின்று உடைக்க வேண்டும். முழங்காலில் நிற்கும்போது, நமது வல்லமை அதிகரிக்கும். எப்படிப்பட்ட கடினமான பாறையையும் உடைத்து விடலாம் என்றார். அவர் மூலம் தேவன் தன்னோடு பேசுவதை அந்த ஊழியர் ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்டார். உள்ளத்தில் உற்சாகமடைந்தவராக வீடு திரும்பினார். அன்றிலிருந்து பல மணி நேரம் முழங்காலில் நின்று ஜெபித்து வெற்றி பெற்றார். தானியேல், எலியா, பவுல், எஸ்தர் இவர்களெல்லாரும் ஜெபித்து வெற்றி கண்டவர்கள்.

         

வேதத்திலே தங்கள் ஜெபத்தினால் ஜெயம் பெற்றவர்கள் அநேகர். அன்னாள் கண்ணீரோடு தனக்கு ஒரு பிள்ளை வேண்டுமென்று போராடி ஜெபித்தாள். தேவசமுகத்தில் தன் இருதயத்தை ஊற்றினாள். அற்புதத்தைப் பெற்றுக் கொண்டாள்.

 

கர்த்தருக்கு பிரியமானவர்களே, இந்த காரியம் என்னுடைய வாழ்க்கையில் நிறைவேறவில்லையே? என்னுடைய வாழ்க்கையில் தொடர் தோல்வியாக இருக்கிறதே என்று கலங்கி போய் இருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். முழங்காலில் நின்று தேவனை நோக்கி கூப்பிடுங்கள். நாம் முழங்காலில் நின்று நம் இருதயத்தை அவரிடம் ஊற்றும் போது, நாம் வேண்டுகிற காரியத்தை பெற முடியும். நம்முடைய ஞானத்தினால் செய்ய முடியாத காரியத்தை நம்முடைய முழங்கால் ஜெபத்தினால் சாதிக்க முடியும். முழங்கால் ஜெபம் அற்புதத்தை நடப்பிக்கும், குறைவுகளை மாற்றும், நம் கண்ணீரைத் துடைக்கும். எனவே வெற்றியின் இரகசியத்தை அறிந்த நாம் இன்று முதல் முழங்காலில் போராடுவோம், ஜெயம் பெறுவோம்.

- Mrs. சிவா

 

ஜெபக்குறிப்பு:

நம் எல்லாப் பணித்தளங்களிலும் 24 மணி நேர சங்கிலி தொடர் ஜெபம் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al