By Village Missionary Movement
Sunday, 20-Oct-2024இன்றைய தியானம்(Tamil) 20.10.2024
பொறாமை வேண்டாம்
"சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி" - நீதிமொழிகள் 14:30
ஹாய் குட்டீஸ், How are you ? O ...Super! உன்னை விட யாராவது அழகாக இருந்தா, நல்லா படிச்சா, விளையாட்டில் First வந்தா கொஞ்சம் பொறாமை உன் உள்ளத்திற்குள்ளே வருமா? its O.k. ஆனா ஆரம்பத்திலேயே சரிபடுத்தவில்லையென்றால் கண்ணுக்குத் தெரியாமல் எலும்பையும் உருக்கக்கூடிய பெரிய நோயாக மாறிவிடும். புரியுதா குட்டீஸ். சரி அதைப்பற்றி ஒரு ஸ்டோரி கேட்கலாமா?
ஐந்தாம் வகுப்பு படிக்கும் கயல் நல்ல கெட்டிக்காரப்பிள்ளை. நல்லா படிப்பாள். துறு துறு வென்று இருப்பதால் அந்த கிளாஸ் டீச்சர் அவளைத்தான் leader - ஆக போட்டார்கள். Miss இல்லன்னா அவளே நன்றாக கிளாசை கவனித்துக் கொள்வாள். சேட்டை பண்ணிக் கொண்டிருக்கிற பிள்ளைகளை கூட நேக்காக பேசி அமைதியாக்கி விடுவாள். சில சமயம் பேசி சத்தம் போடுகிற பிள்ளைகளின் பெயரை எழுதி டீச்சர் வந்தவுடன் கொடுத்து விடுவாள். நீங்களும் அப்படி செய்வீங்களா? இப்படி எல்லாவற்றிலும் சூப்பர்ன்னு சொல்லக்கூடிய கயலுக்கு ரோஜர் வைத்திருந்த விலையுயர்ந்த பேனாவைக் கண்டவுடன் பொறாமை வந்து விட்டது. என்னுடைய மாமா வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தார். என்னுடைய Birthday -க்கு Gift கொடுத்தார். எவ்வளவு சூப்பரா எழுதுகிறது பாரேன். இப்படி தன் நண்பன் கோபாலிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட கயல் ரொம்ப வெறுப்படைந்தாள்.
நல்லாவே படிக்கத் தெரியாத இவனுக்கு விலையுயர்ந்த பேனாவா? கூடவே கூடாது, எனக்கு கூட கிடைக்கவில்லையே என்று மனதிற்குள்ளே நினைத்தாள். என்ன செல்லங்களே, மனசுக்குள்ள நினைப்பது எப்படி தெரியும்னு நினைக்கிறீங்களா? Jesus எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்ல. Break time ல கயல் வேகமாக போய் ரோஜரின் பேனாவை எடுத்து சுவரில் டமார்ன்னு எறிந்தாள். இரண்டாக உடைந்து விட்டது. இதை Miss பார்த்ததும் கயலா இப்படி என்று ஆச்சரியப்பட்டார்கள். தலை கவிழ்ந்த கயலின் கண்களில் கண்ணீர், Miss என்ன செய்யப் போறாங்களோ என்ற பயம். ஆனால் Miss கயலின் தோளில் கை போட்டு அன்பான வார்த்தையால் பேசினார்கள். பொறாமை எவ்வளவு பெரிய தீங்கை, பாவத்தை செய்ய வைக்கிறது பார்த்தாயா? ஆரம்பத்திலேயே பொறாமையை கிள்ளி எறிந்துவிடு. Jesus உனக்கு உதவி செய்வார் என்ற ஆசிரியையின் கனிவான வார்த்தைகள் கயலை மனம் திரும்ப வைத்தது.
குட்டிச் செல்லங்களே ! யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமா பொறாமை குணம் மாறும். சரியா. கண்ணுக்கு தெரியாமல் நமக்குள்ளேயே இருக்கின்ற பொறாமையை அழித்து, இயேசப்பா உதவியோடு வெற்றி வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள் குட்டீஸ்.
- Mrs. ரூபி அருண்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864