By Village Missionary Movement
Sunday, 13-Oct-2024இன்றைய தியானம்(Tamil) 13.10.2024 (Kids Special)
நன்மை செய்
"…நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்;…" - எபேசியர் 2:10
செல்ல குட்டிகளே, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? Very good. என்னது கதை சொல்லணுமா? அவ்வளவு ஆசையா? ரெடியா இருக்கீங்களே! சரி, சரி, இன்றைக்கு ஒரு உண்மை சம்பவத்தை கேட்போமா?
Beach - க்கு போய் கடற்கரையில் விளையாடி, கடல் தண்ணீரில் மூழ்கி அலை வரும் போது Jump பண்ணி, குதித்து ஜாலியா enjoy பண்றது உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே! பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் தான் அனிவா என்ற தீவு இருந்தது. சுற்றிலும் தண்ணீர் நடுவில் மக்கள் இருப்பது தான் "தீவு" பாடத்தில் படித்து இருப்பீங்க. அப்படித்தானே! இங்கே பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ கிடையாது. சரியான ஆடை அணிய கூட அத்தீவு மக்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட மக்களைத் தேடிச் சென்றார் ஜான் பேட்டன். அவர்களுக்கு முதலில் ஆடை அணிய சொல்லிக் கொடுத்தார். எல்லாரோடும் அன்பாக பேசி, பழகி நன்மை செய்து வந்தார். படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் கூறி, பள்ளி ஓன்று ஆரம்பித்தார்.
தாய், தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கு home ஒன்றை ஆரம்பித்தார். திடீரென்று தண்ணீர் பஞ்சம் வந்தது. என்ன, தீவில் தண்ணீர் பஞ்சமா என யோசிக்கிறீர்களா? குடிதண்ணீருக்கு பஞ்சம், கடல் தண்ணீர் உப்பாயிருக்குமல்லவா? ஆகவே கிணற்றுத் தண்ணீரை பார்த்திராத மக்களுக்கு கிணறு தோண்ட சொல்லிக் கொடுத்தார். பூமிக்கு அடியில் இருந்து வரும் தண்ணீரைக் கண்ட தீவின் மக்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பூமிக்கு அடியில் இருந்து மழை பெய்யச் செய்த கடவுள் தான் உண்மையான தெய்வம் என ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். நாளடைவில் அத்தீவின் தலைவர் இயேசுவை ஏற்றுக் கொண்டார். ஒன்றும் தெரியாமல் இருந்த அனிவா தீவு மக்களுக்கு ஜான் பேட்டன் எவ்வளவோ நன்மைகளை செய்தார். போதும் என்று நினைக்காமல் தொடர்ந்து நற்கிரியைகளை செய்து கொண்டே இருந்தார். முடிவு என்ன நடந்தது, அந்த தீவு மக்கள் எல்லாரும் இயேசுவை அறிந்து கொண்டார்கள்.
குட்டிச் செல்லமே, நற்கிரியைகளைச் செய்யும்படியாகத் தான் நீயும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். நீ இன்று படிப்பதற்கு ஏதோ ஒரு கிறிஸ்தவ மிஷனெரி தானே காரணம்! கல்வியறிவு இல்லாவிட்டால் நாம் எப்படி இருந்திருப்போம். யோசித்துப்பார். யாராவது உதவி செய்யட்டும், இவர்களுக்கு எதற்கு நான் செய்யணும்? என்று நினைக்காமல் உன்னால் முடிந்த உதவியை செய்துவிடு. இதற்கான பலனை தேவன் நிச்சயம் தந்தருளுவார்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864