By Village Missionary Movement
Friday, 30-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 30-04-2021
திரும்பி வா
“...காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?” - லூக்கா 15:4
ஒரு மேய்ப்பனிடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. மந்தையின் மேல் மிகவும் கவனமாயிருக்கும் அவருக்கு சில மாதங்களுக்கு முன் பிறந்த குட்டி ஆட்டுக்குட்டி மீது மிகவும் பிரியம். அதற்கு டாலி என்று பெயர் வைத்து செல்லமாய் அழைப்பார். ஆனால் அதுவோ குறும்புக்கார ஆடாய் வளர்ந்தது. மேய்ப்பனுக்கு தெரியாமல் தனக்கு இஷ்டமான இடத்திற்கெல்லாம் போய் ஜாலியாக சுற்றிவிட்டு சாயங்காலம் மந்தையுடன் வந்து சேர்ந்துகொள்ளும். இதேப்போல ஒருநாள் கூட்டத்திலிருந்து எஸ்கேப் ஆகி சென்று ஒரு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டது. கத்தி கதறியது, அது யார் காதிலும் எட்டவில்லை. மாலை இருட்டி வரும் நேரத்திலே டாலியை தேடிய மேய்ப்பன் அதை காணாமல் அங்குமிங்கும் தேடி அதன் பெயரைச் சொல்லி கூப்பிட்டுக் கொண்டே நடந்தான். மேய்ப்பனின் குரலைக் கேட்ட டாலி நான் இங்குதான் இருக்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்பது போல் துயர குரல் எழுப்பியது. மேய்ப்பன் அதைக் கண்டு தோள்மேல் தூக்கிச் சென்றார். என்னை மன்னித்து விடுங்கள் என்பதுபோல் அவர் முகத்தைப் பார்த்தது.
வேதத்திலும் ஒரு தகப்பனுடைய இரண்டு குமாரர்களில், இளையவன் தன் நண்பர்கள் மற்றும் உலக இன்பங்களைக் கண்டு அதனை அனுபவிக்க தன் தகப்பனிடம் ஆஸ்தியில் தன் பங்கை வாங்கி தன் வீட்டை விட்டு சென்றான். ஆனால் தகப்பனோ தன் மகன் என்றாவது ஒரு நாள் வருவான் என்று காத்துக்கொண்டேயிருந்தார். இளைய குமாரனும் தன் நண்பர்களுடன் உலக இன்பங்களை அனுபவித்தான். ஒருநாள் தன் பணம் முழுவதும் செலவழிந்தது, நண்பர்களும் கைவிட்டு சென்று விட்டனர். அவன் தன் ஆகாரத்திற்கு கூட வழியில்லாமல் இருந்தபோது தன் தகப்பனின் அரவணைப்பு, பாதுகாப்பு எண்ணி தகப்பனிடம் வந்தான். அவன் பிள்ளையைப் போல் இல்லாமல் அழுக்கான வஸ்திரத்தோடு, கரை படிந்த சோக முகத்தோடு வந்தான். ஆயினும் தகப்பன் ஓடிச் சென்று கட்டி அணைத்து, முத்தமிட்டு அவனுக்கு வஸ்திரத்தை மாற்றி, மோதிரம் அணிவித்து மீண்டும் தன் மகனாகவே ஏற்றுக்கொண்டார்.
இதை வாசிக்கும் பிரியமானவர்களே! அந்த ஆடு தன் விருப்பப்படி சென்றது போல, இளைய குமாரன் தன் நண்பர்கள், உலக சந்தோஷங்களுக்காக வீட்டை விட்டு சென்றது போல, நாமும் சில மாயையான உலக இன்பங்களைக் கண்டு பரம தகப்பனாம் இயேசுவை விட்டு அவருடைய பிரசன்னத்தை விட்டு, அவர் நம்மேல் வைத்த திட்டத்தை விட்டு விலகி எங்கோ சென்று கொண்டிருக்கிறோமோ? ஒரு நிமிடம் நின்று சிந்திப்போம். நம் பரம தகப்பன் தாயின் கருவில் உருவானது முதல் இன்று வரை எவ்வளவாய் உங்களை பராமரித்து, பாதுகாத்து, தேவைகளை சந்தித்து நடத்தினார் என்பதை யோசித்துப் பாருங்கள். மீண்டும் அவரிடம் திரும்பி வாருங்கள். பரம தகப்பன் இன்றும் உங்களை ஏற்றுக்கொள்ள, அதே பாசத்தோடு உங்களை நேசிக்க ஆவலோடு உள்ளார். இருக்கின்ற வண்ணமாகவே வாருங்கள். இருகரம் விரித்து காத்திருக்கிறார்.
- J. எபினேசர்
ஜெபக்குறிப்பு:
திருமணத்திற்கு காத்திருக்கும் மிஷனெரிப் பிள்ளைகளின் திருமணகாரியத்திற்காக, குழந்தைக்காக காத்திருக்கும் மிஷனெரித் தம்பதிகளுக்கு தேவன் அற்புதம் செய்ய ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250