Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.10.2024
Share:

By Village Missionary Movement

Monday, 07-Oct-2024

இன்றைய தியானம்(Tamil) 07.10.2024

 

ஊக்கமான ஜெபம்

 

"…அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்” - அப்போஸ்தலர் 12:5

 

எனக்குத் தெரிந்த ஒரு இளம் பெண்ணுக்கு திருமணம் ஆகியது. வடநாட்டில் அருட்ப்பணியாளராக ஊழியம் செய்து வந்த கணவரோடு சில நாட்களில் அங்கு செல்ல வேண்டும். திருமணத்திற்கு முன்பு வரை தான் வசித்த பட்டணத்தில் ஒரு பெரிய ஞாயிறு பள்ளி வகுப்பை நடத்தி வந்தாள். அது பல குழந்தைகளுக்கு ஆசீர்வாதமாக இருந்தது. தனக்கு பிறகு யார் அந்த வகுப்பை நடத்துவார்கள் என்று அவள் கவலைப்பட்டாள். அவளுக்கு ஒரு இளைய சகோதரன் இருந்தான். ஆனால் அவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. தனது சகோதரன் மனந்திரும்பி தான் விட்டுச்செல்லும் வகுப்பை நடத்த வேண்டும் என்று அவள் ஊக்கமாக ஜெபித்து வந்தாள். நாட்கள் நெருங்க நெருங்க அவள் இன்னும் ஊக்கமாக ஜெபித்தாள். கடைசியாக அவள் புறப்பட வேண்டிய நாள் வந்தது. வீட்டில் உள்ள அனைவரும் கண்ணீரோடு அவளுக்கு விடை கொடுத்தனர். அவளுடைய சகோதரன் வேகமாக ஓடிவந்து, அவளுடைய கைகளை பற்றிக் கொண்டான். அக்கா உன்னுடைய இரட்சகரை நானும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய ஞாயிறு வகுப்பை நான் நடத்துகிறேன் என்று வாக்கு கொடுத்தார். அவள் மிகவும் சந்தோஷத்தோடு தன் ஜெபத்திற்கு பதில் அளித்த தேவனை துதித்து மகிழ்ந்தாள்.   

 

அப்போஸ்தலனாகிய பேதுரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பேதுருவுக்கு சிறைச்சாலையில் பாதுகாப்பாக போர்சேவகர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். அப்படியே பேதுரு சிறைச்சாலையில் காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம் பண்ணினார்கள். இந்த ஊக்கமான ஜெபம் பேதுருவை தூதன் மூலமாக சிறைச்சாலையில் இருந்து வெளியே கொண்டு வந்தது. 

 

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." (யாக்கோபு 5:16) என்று வேதமும் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. நாம் செய்கின்ற ஊக்கமான ஜெபங்களுக்கு நிச்சயம் ஆண்டவர் பதில் தருவார். இரட்சிக்கப்படாத நம்முடைய உறவினர்களுக்கும், வியாதி உள்ளவர்களுக்கும், பாவசாபத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் செய்கின்ற ஊக்கமான ஜெபம் பலன் தரக்கூடியது. இதுவரை நாம் ஜெபித்த ஜெபங்களுக்கு பதில் வராமல் அல்லது ஜெபித்து ஜெபித்து உண்மையில் நாம் சோர்ந்து போய் இருப்போம் என்றால் இன்று மீண்டும் தொடங்குவோம். நாம் செய்கிற ஊக்கமான ஜெபம் நருங்குண்ட அநேகரை விடுதலையாக்கும் என்பது உறுதி.

- Mrs. சக்தி சங்கர்

 

ஜெபக்குறிப்பு:

நம் டியூஷன் சென்டரில் படிக்கும் பிள்ளைகளின் ஞானத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş