Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05.10.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 05-Oct-2024

இன்றைய தியானம்(Tamil) 05.10.2024

 

தீர்மானம் எப்படிப்பட்டது?

 

"தானியேல்… தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு,…" - தானியேல் 1:8

 

பிரியமான தேவ பிள்ளைகளே, ஒரு குரங்கு வனாந்தரத்திலுள்ள ஒரு மரத்தின் பழத்தைப் புசித்தது. சில மணி நேரங்கள் கழித்து, குரங்குக்கு வயிற்றுப்போக்கு உண்டாகி, மிகவும் கவலைக்கிடமாக பரிதாப நிலையை அடைந்தது. அப்பொழுது அது ஒரு தீர்மானம் பண்ணினது. இந்தப் பக்கமே வரமாட்டேன். இந்த பழத்தையோ தின்ன மாட்டேன் என்று. சில நாட்கள் கடந்தது. அந்த குரங்கு அந்தப் பக்கமாக போனால் என்ன? அந்தப் பழத்தை கொஞ்சமாக சாப்பிட்டால் என்ன? என்று நினைத்து அந்த பழத்தை கொஞ்சம் சாப்பிட்டது. அதற்கு பாதிப்பு ஒன்றும் உண்டாகவில்லை. அன்று வேறு எதையோ சாப்பிட்டு விட்டு இந்த பழத்தையும் சாப்பிட்டிருப்பேன். இன்றைக்கு இந்த பழத்தை மாத்திரம் சாப்பிடுவேன் என்று சொல்லி சாப்பிட்டது. நடந்தது என்ன? சில மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு அதிகமாகி அந்த குரங்கு ஆபத்தான கட்டத்துக்கு போய் பின்பு மரித்து போயிற்று. காரணம் அது ஒரு நச்சுத்தன்மையுள்ள பழமாயிருந்தது.

 

இங்கே ரூத் என்ற மோவாபிய பெண் ஒரு தீர்மானம் செய்தாள். ரூத் 1 :14 - 17 ல் எல்லாவற்றையும் இழந்த தன் மாமியாரோடு வருவதற்கு ஒரு தீர்மானம் பண்ணினாள். அந்த தீர்மானம் என்னவென்றால், திரும்பிப்போவதைக் குறித்து பேசக்கூடாது. நீர் தங்குகிற இடம் நான் தங்குமிடம், உம் ஜனங்களே இனி என் ஜனங்கள், உம் தேவன் இனி என் தேவன், மரணமே அல்லாமல் வேறு ஒன்றும் என்னைப் பிரிக்க விடமாட்டேன் என்றாள். இவளது தீர்மானத்தின்படி வாழ்ந்தாள். வளமான வாழ்க்கை பெற்றுக் கொண்டாள். மாற்கு 13 :13 ல், “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்”.

     

 பிரியமான தேவபிள்ளைகளே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொண்ட தீர்மானம் இன்று எந்த நிலைமையிலிருக்கிறது. பலமுள்ளதாயிருக்கிறதா? பலவீனப்பட்டதாயிருக்கிறதா? நம்மை எப்பொழுது விழுங்கி விடலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல பிசாசாகிய சாத்தான் தினந்தோறும் பருந்துபோல, நம்மை சுற்றி சுற்றி வட்டமிடுகிறான். குரங்கைப் போல, ஆரம்பத் தீர்மானம் உறுதிப்பட்டதாயிருந்தது. காலம் கடந்து போகப்போக தீர்மானம் பலவீனப்பட்டதாய் மாறி விடுகிறதா? முடிவோ அதற்கு பரிதாபத்தை உண்டாக்கியது. ஆனால் ரூத்தின் தீர்மானம் ஆரம்பம் முதல் முடிவு வரை அசைக்க முடியாததாயிருந்தது. இன்று நம் ஒவ்வொருவரது தீர்மானமும் உறுதி நிறைந்ததாயிருக்கிறதா? நிச்சயமாக இயேசு கிறிஸ்துவினால் நமக்கு மிகுந்த பலன் உண்டாகும். கொடுக்கப்பட்ட ஊழியமோ, வேலையோ, வியாபாரமோ, குடும்பமோ ஆண்டவரின் தீர்மானத்தின்படி நடந்தால் வெற்றி நிச்சயம், விடுதலை சத்தியம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

- Pr. S.A..இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:

25,000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்திற்காய் ஜெபிக்கும் ஜெப குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş