Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.09.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 28-Sep-2024

இன்றைய தியானம்(Tamil) 28.09.2024

 

தியாகத்துக்கு பலன் உண்டு

 

"எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத்தரும்" - எபிரெயர் 12:11

 

வேதத்தில் பலரும் சிட்சையை அனுபவித்து, தியாகப் பாத்திரங்களாய் வாழ்ந்து பாக்கியம் பெற்றதை அறிந்திருக்கிறோம். நகோமி தன் வாழ்க்கையில் சிட்சையை அனுபவித்து, பெரிய தியாகத்தின் பாதையில் சென்றாள் . இறுதியில் நகோமி பெரிய பாக்கியமடைந்ததைக் காண்கிறோம். மாராவின் தண்ணீர் மதுரமானது போல், நகோமி என்னும் செழிப்பு, மாரா போல் கசப்பாய் மாறி பின்பு மதுரமாக மாறியது. யோபுவின் வாழ்க்கை தியாகத்தின் எல்லையாக இருந்தது. பின்பு இரட்டிப்பான பலனை யோபு தன் வாழ்க்கையில் பெற்றதைக் காண்கிறோம்  

 

மிஷனெரிகளின் தந்தை என போற்றப்பட்ட வில்லியம்கேரியின் வாழ்க்கை பாதையில், அவரது வேதாகம மொழி பெயர்ப்பு பிரதிகள், அச்சு இயந்திரங்கள், கூடாரம் இன்னும் பல பொருட்கள், பணம் எல்லாம் தீக்கிரையாகி தனது பிள்ளையையும் மனைவியையும் இழந்தபோதிலும் மனம் தளராது உழைத்து, பல பாடுகளைப் பட்டு தியாகச் செம்மலாய் வாழ்ந்து என்றும் காலத்தால் அழியாதவராய் கிறிஸ்தவ வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். மரித்தும் பேசும் ஆபேலின் இரத்தம் போல் வில்லியம்கேரி இறந்தும் அவர் சரித்திரம் பேசப்படுகிறது.  

 

தாமஸ் ஆல்வா எடிசன் நூற்றுக்கும் அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர் ஆவார். அவர் புகழ் என்றும் மங்காமல் இருப்பதற்கு பின்னணி அவருடைய தியாகத்தின் பலன்கள் தான் கண்டுபிடித்த அரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தீக்கிரையானது. அவருடைய மனைவி நமது 2௦ லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்கள் போயிற்றே என்று கதறினார். ஆனால் எடிசன் கூறினார் “நமது எல்லாருடைய தவறுகளும் கூட இந்த தீயில் பொசுங்கி சாம்பல் ஆயிற்று" என்று மனைவியிடம் கூறினார். முதலில் ஆண்டவருக்கு நன்றி சொல். இதை ஆண்டவர் நன்மைக்காகவே நம் வாழ்வில் அனுமதித்திருக்கிறார். எந்த ஒரு நஷ்டம் வந்தாலும் அது ஒரு நன்மையை தன்னுள் வைத்திருக்கும் அதனால் நாம் ஆரம்பத்திலிருந்து நம் பணியை ஆரம்பிப்போம் என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தியாகம், உலகத்திலேயே பெரியது. அவரையே நோக்கிப் பார்த்து முன் நடப்போம். ஆகவே உங்கள் வாழ்வில் வரும் பாடுகளையும் தோல்வியையும் கசந்த அனுபவங்களையும் எண்ணி எண்ணி துவண்டு விடாமல் முன்னேறுவோம்.  

 

சிலுவை இல்லாமல் மீட்பு இல்லை !

செங்கடல் இல்லாமல் கானான் இல்லை!

சோதனை இல்லாமல் சாதனை இல்லை!

வேதனை இல்லாமல் வெற்றி இல்லை!

 

- Bro. சாமுவேல் மோரீஸ்

 

ஜெபக்குறிப்பு:  

சபை இல்லாத தோழமை ஊழியர்களுக்கு சபைகள் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al