By Village Missionary Movement
Friday, 27-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 27.09.2024
பரலோக பொக்கிஷம்
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூட கொடுக்கப்படும்" - மத்தேயு 6:33
இன்றைய காலகட்டத்தில் பலர் பலவிதமான முறைகளில் பணம் சம்பாதிக்கின்றனர். தொழில், வியாபாரம், வேலை என்று இன்னும் எத்தனையோ முறைகளில் பணமீட்டுகிறோம். சர்க்கஸில் மரண கிணறு ஒன்று அமைத்து பைக்கில் இரண்டு நபர்கள் மோதாமல் சுற்றி வருவார்கள். ஊஞ்சலில் ஒரு பக்கம் விட்டு மறுபக்கம் எட்டிப் பிடிப்பது, மேலும் சிங்கம், புலி, கரடி, குரங்கு இவைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பர். கிரிக்கெட் நாட்டுக்கு நாடு, தேசத்துக்கு தேசம், முன்னமே அறிவிப்பு கொடுத்து அதற்கான பயிற்சி எடுத்து, விளையாட்டில் வெற்றி பெற்ற அணியினருக்கு பல கோடி பணம் கிடைக்கிறது. இந்த முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது. படிக்கிறதிலும் எந்த படிப்பு படித்தால் உயரலாம் என்று ஆராய்ந்து வக்கீல், ஐஹளு., னுச. என சிறந்த படிப்புகளை படிக்க கடினமாக முயற்சிக்கிறோம். இவையெல்லாம் நல்லதுதான். அது தவறு அல்ல.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பணத்தைக் குறித்து பல உவமைகளை சொல்லியிருக்கிறார். அவற்றில் ஒன்றுதான் ஐசுவரியமுள்ள ஒருவனுக்கு நிலம் நன்றாக விளைந்த உவமை. அவன் அந்த நிலத்தில் விளைந்தவைகளை களஞ்சியத்தில் சேர்த்து வைக்க இடம் இல்லாமல் அதனை பெரியதாக கட்டி, இளைப்பாறி, புசித்து, குடித்து, பூரிப்பாயிரு என்று தன் ஆத்துமாவோடு சொல்லுவேன் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். தேவனோ அவனை நோக்கி மதிகேடனே உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த ராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்? என்றார்.
எனக்கு அருமையானவர்களே! இந்த உலகில் நாம் வாழ்வதற்கு பணம் தேவையானது தான். ஆனால் அந்தப் பணமே நம் உயிர் மூச்சாக மாறிவிடக்கூடாது. அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்று அநேகர் முயற்சிக்கிறார்கள். அதற்கு கர்த்தர் தரும் பதில், ஞானவான்களின் ஞானம் போதாது, ஐசுவரியம் அடைய புத்தியும் போதாது, எல்லாருக்கும் சமயமும், தேவசெயலும் நேரிட வேண்டும். எனவே நாம் முதலாவது தேவனை தேடினோம் என்றால் மற்ற எல்லாவற்றையும் அவர் நமக்குக் கொடுப்பார். நாம் பூமியில் வாழ்கின்ற நாட்களில் ஆத்துமாவிற்கு தேவையான இயேசுவை அறிவோம். இவ்வுலகில் நமக்கு இருப்பதெல்லாம் இங்கேயே முடிந்துவிடும். நித்தியத்திற்கு எதுவும் கூட வராது. பரலோக பொக்கிஷமே நம்முடன் வரும். எனவே பரலோக வாழ்வை வாழ வஞ்சிப்போம். இந்த சிந்தை நம் அன்றாட வாழ்வை நிரப்பட்டும். பணம் சம்பாதிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து ஆத்துமாவை இழந்து விடாமலிருக்க சிந்திப்போம்! செயல்படுவோம்.
- V.P. பச்சையமுத்து
ஜெபக்குறிப்பு
கைப்பிரதி ஊழியங்கள் மூலம் கைப்பிரதியைப் பெற்றவர்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864