Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26.09.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 26-Sep-2024

இன்றைய தியானம்(Tamil) 26.09.2024

 

ஜீவனும் ஜீவாதிபதியும்

 

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்;" - ஏசாயா 41:10

 

ஜான் ஃபிரண்டஸ் என்ற போதகர், மார்ட்டின் லூத்தரின் நண்பர், ஐந்தாம் சார்லஸ் என்ற அராஜக அரசன், போதகர் ஜான் வாழ்ந்த பட்டணத்திற்கு ஒரு படையை அனுப்பி போதகரை பிடித்துவந்து தண்டிக்கத் திட்டமிட்டான். போதகர், தன் ஜீவனை காக்கும்படி ஜெபித்தார். ஆண்டவர் அவரிடம் “ரொட்டி, தண்ணீர் எடுத்துக் கொண்டு அடுத்த தெருவுக்குப் போ, திறந்த வீட்டைக் காண்பாய். அங்கே நுழைந்து, கூரைக்கு சற்று கீழேயுள்ள அட்டியில் போய்ப் படுத்துக் கொள்" என்று கூறினார். அதேபோல் போதகர் போய் படுத்துக் கொண்டார். தினமும் ஒரு கோழி அங்கு வந்து ஒரு முட்டை போட்டுச் சென்றது. 14 நாட்கள் முட்டை கிடைத்தது. 15 வது நாள் கோழி வரவில்லை. “படை போய்விட்டது” என மக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டார். வெளியே வந்தார். தன்னுடைய ஜீவனை ஆண்டவர் எவ்வளவாய் பாதுகாத்தார் என நினைத்து ஆண்டவரைத் துதித்தார். நம்மில் சிலர் வியாதியினால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம். மருத்துவரும், மருத்துவமும் கைவிட்டிருக்கலாம் கலங்காதீர்கள். “அவருடைய (கிறிஸ்துவின்) தழும்புகளினாலே சுகமானீர்கள்” என்று வேதம் கூறுவதை விசுவாசித்து ஜெபியுங்கள். சுகம் பெறுவீர்கள். கடன் பாரத்தினால் அழுத்தப்பட்டு, அதன் மூலம் நிந்தையை அனுபவித்து, கடனைத் தீர்க்க வழி தெரியாமல் தற்கொலை செய்ய திட்டமிடுகிறீர்களோ? 2 இராஜாக்கள் 4:1-7 வசனங்களிலுள்ள நிகழ்ச்சியை பாருங்கள். விதவையான தீர்க்கதரிசியின் மனைவி கடனை கட்ட வழி தெரியாமல் எலிசா தீர்க்கதரிசியை நாடி வருகிறாள். கடன் கொடுத்தவன் அவளுடைய இரண்டு குமாரரையும் அடிமையாக எடுத்துக் கொள்ள வந்தான். தாயின் உள்ளம் துடித்தது. உறவுகளையோ, நண்பர்களையோ அவள் நாடவில்லை. கர்த்தரிடமே சரணடைய தீர்க்கதரிசியை நாடினாள். விளைவு... அவர் சொற்படி நடந்தாள், கடனை கட்டவும் வழி திறந்தது, வாழ்வாதாரத்திற்கான வழியும் தெரிந்தது.   

 

பிரியமானவர்களே, நீங்கள் ஊழியம் செய்யும் இடத்தில் எதிர்ப்புகள் அதிகமிருக்கிறதோ? கொலை மிரட்டல்கள் வருகிறதோ? பயப்படாதிருங்கள். தாயினும் மேலான அன்புடைய தேவன் நம்மைக் காப்பார். லூக்கா 12:7 கூறியபடி நம் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள். ஆண்டவரின் சித்தமில்லாமல் நம் வாழ்வில் எதுவும் நடக்காது. நமது ஜீவன், ஜீவனுக்கு அதிபதியான ஜீவாதிபதியிடம் உள்ளது. எனவே பயப்பட வேண்டாம். கலங்கவும் வேண்டாம். கர்த்தர் நம்முடனே!

- Mrs. வனஜா பால்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

வியாழன் தோறும் நடக்கும் மருத்துவமனை ஊழியத்தில் சந்திக்கப்படும் நபர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al