Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23.09.2024
Share:

By Village Missionary Movement

Monday, 23-Sep-2024

இன்றைய தியானம்(Tamil) 23.09.2024

 

எவ்வளவு நேரம்

 

"…எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்" - லூக்கா 21: 36

 

ஜார்ஜ் முல்லர் என்ற அருமையான ஓர் தேவ மனிதரிடத்தில் “நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஜெபிப்பீர்கள்?” என்ற கேள்வி கேட்டபொழுது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “பல மணி நேரங்கள், மட்டுமல்ல, நான் ஜெப சிந்தையுடனேயே ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நடக்கும் போதும், உட்காரும் போதும், எழுந்திருக்கும் போதும் ஜெபிப்பேன். என் வாழ்க்கை முறையையே ஜெபமாக மாற்றிக் கொண்டேன்" என்றாராம். தேவப்பிள்ளைகளே, நாம் எப்போதும் ஜெபம் பண்ண வேண்டுமென்று வேதம் ஆலோசனை நமக்குக் கூறுகிறது. எப்போதுமே ஜெபிக்க வேண்டும் என்பதற்காக வேலை செய்து கொண்டே ஜெபித்தால் போதும் என்று எண்ணி, தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தேவ சமூகத்தில் அமர்ந்திருக்க வேண்டியதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எவ்வளவு நேரம் நாம் ஜெபித்தாலும் அந்த ஜெபம் கருத்தாக எலியா ஜெபித்ததைப் போல பதிலைப் பெற்றுக் கொள்ளும் ஜெபமாக இருக்க வேண்டும். நாம் எப்படி எல்லாம் ஜெபிக்க வேண்டுமென்றால்: 

 

1. கருத்தோடு ஜெபிக்க வேண்டும் . -யாக்கோபு 5: 17 

2. விழித்திருந்து ஜெபிக்க வேண்டும் . -மத்தேயு 26: 41 

3. சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும். - லூக்கா 18: 1  

4. விசுவாசம் உள்ளவர்களாய் ஜெபிக்க வேண்டும் -மத்தேயு 21: 22 

5. ஸ்தோத்திரப் பாட்டை பாடி ஜெபிக்க வேண்டும் - நெகேமியா11 : 17

6. அதிக ஊக்கத்தோடு ஜெபிக்க வேண்டும் -யாக்கோபு 5: 16 

7. உபவாசித்து ஜெபிக்க வேண்டும் -மாற்கு 9 : 29

8. இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் - கொலோ 4: 2

9. பரிசுத்த ஆவிக்குள் ஜெபிக்க வேண்டும் - யூதா 20 

10. அறைக்கதவைப் பூட்டி ஜெபிக்க வேண்டும் -மத்தேயு 6 :6 

 

மேலே சொல்லப்பட்டது போலவே நாம் ஜெபிக்கும் போது என்னென்ன காரியங்கள் நடக்கும் என பார்ப்போம்.  

1. ஜெபித்த காரியத்திற்கு பதில் கிடைக்கும்.  

2. சோதனைகளுக்கு தப்பித்துக் கொள்ளலாம்.  

3. விசுவாசம் நமக்குள் பெருகும்.  

4. நாம் கேட்டதைப் பெற்றுக் கொள்வோம்.  

5. தேவ பிரசன்னத்தை உணர முடியும்.  

6. நம் உள்ளான மனிதனில் பெலன் உண்டாகும்.  

7. ஜெயமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியும்.  

8. கர்த்தரோடு சஞ்சரிக்க முடியும்.  

9. தேவ சித்தத்தை நிறைவேற்ற முடியும். 

10. மறைவிடத்தில் ஜெபித்த காரியங்களுக்கு வெளியரங்கமாய் பதில் கிடைக்கும். 

 

பிரியமானவர்களே, நம் தனி ஜெபத்தை இன்னும் அதிகப்படுத்துவோம் தேவனுக்காய் பெரிய காரியங்களைச் செய்வோம்.

- Mrs. பிரிஸ்கில்லா தியோபிலஸ்

 

ஜெபக்குறிப்பு: 

பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் பயனடைவோர் தேவ அன்பை அறிய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet esbet amgbahis betpuan grandpashabet sonbahis mercurecasino betplay cratosroyalbet grandpashabet grandpashabet casibom marsbahis grandpashabet casibom jojobet jojobet casibom superbetin superbetin giriş marsbahis marsbahis giriş almanbahis almanbahis giriş amgbahis amgbahis giriş betasus betasus giriş betmartin betmartin giriş betoffice betoffice giriş jojobet jojobet giriş betpas betpas giriş betsat betsat giriş betsmove betsmove giriş egebet egebet giriş galabet galabet giriş grandpashabet grandpashabet giriş hiltonbet hiltonbet giriş holiganbet holiganbet giriş jasminbet jasminbet giriş kareasbet kareasbet giriş kargabet kargabet giriş kavbet kavbet giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş norabahis norabahis giriş pashagaming pashagaming giriş perabet perabet giriş piabellacasino piabellacasino giriş tarafbet tarafbet giriş winxbet winxbet giriş supertotobet supertotobet giriş atlasbet atlasbet giriş