By Village Missionary Movement
Sunday, 22-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 22.09.2024 (Kids Special)
அதிகமாய் செய்பவர்
"…நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்" - மத்தேயு 21:22
குட்டீஸ் இன்றைக்கு நாம் ஒரு உண்மைச் சம்பவத்தைக் கேட்போமா? ஜெபத்தைக் குறித்த சம்பவம் இது. கேட்க ரெடியா? பில் பிரைட் அமெரிக்கா தேசத்திலுள்ள ஒரு வியாபாரி. அவர் தன் வியாபாரத்தின் மத்தியிலும் அடிக்கடி தனித்துப் போய் ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது வியாபாரமும் நன்கு பிஸியாக நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவர் ஜெபத்தை விடவில்லை இவரது பிரதானமான ஜெபம் “தேவனே ஒரு ஆத்துமாவையாகிலும் இரட்சிப்பிற்குள் வழிநடத்த உதவி செய்யும்” என்பதாகும். இவ்வாறு ஜெபித்து விட்டு அமைதியாக இருக்காமல் தனக்கு நேரம் கிடைக்கும் போது தெருக்களில் ஊழியத்தை தொடங்கினார். பின்னர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதில் ஆர்வமான அவர் வேலை நாட்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று உங்களைப் போன்ற மாணவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார். அநேகர் அவரை ஏற்றுக் கொண்டனர். மேலும் இவரோடு இணைந்து பின் ஊழியம் செய்ய பலரும் இணைந்தனர். உடனே “கேம்பஸ் குருசைடு” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
நான்கு சட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் மக்கள் எளிதில் இயேசுவை அறிந்து கொள்ள கைப்பிரதி ஒன்றை அச்சிட்டு வெளியிட்டார். இது எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் இருந்ததால் பல மொழிகளில் அச்சிடப்பட்டது 250 கோடிக்கு அதிகமான கைப்பிரதிகள் அச்சிடப்பட்டு பல நாடுகளில் விநியோகிக்கப்பட்டது. இவரது இயக்கத்தில் 17,000 முழு நேர ஊழியர்கள், 2 லட்சத்திற்கும் அதிகமான தன்னார்வ ஊழியர்களும் உள்ளனர். மக்களுக்கு இன்னும் எளிய முறையில் படிக்காத மக்களும் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள இயேசு என்ற திரைப்படத்தை தயாரித்து அதை பாமர மக்கள் மத்தியிலும் திரையிட்டனர். இயேசு என்ற திரைப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 45 கோடிக்கு அதிகமான மக்கள் இத்திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். அநேகர் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள இது ஏதுவாயிருந்து வருகிறது. பில் பிரைட்டின் ஜெபம் ஒரு ஆத்துமாவை வழிநடத்த வேண்டும் என்பது, ஆனால் இவர் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இயேசுவை அறிந்துள்ளனர். குட்டீஸ், இதே மாதிரி நீங்களும் மிகவும் விருப்பத்தோடு தேவனிடம் ஜெபிக்கும் ஜெபத்திற்கு தேவன் நீங்கள் கேட்பதற்கும் அதிகமாய் செய்வார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். விசுவாசத்தோடு கேளுங்கள். பதிலை நிறைவாய் பெற்று மகிழுங்கள்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864