By Village Missionary Movement
Friday, 20-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 20.09.2024
நிதானம் பிரதானம்
"…நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்" - 1 பேதுரு 2:20
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது கருணை கொண்ட ஒருவன், அவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்றான். அவரது தந்தை அவனிடம் அவரை ஓரமாக மூலையில் உட்கார வைத்து உணவை, நீரை அருகில் வை. ஆனால் நீ அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம். பசித்தால் அவரே உணவை எடுத்து உட்கொள்ளட்டும் என்றார். அவனும் அவ்வண்ணமே செய்தான். அந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் கத்துவார், கற்களை எடுத்து எறிவார், ஆனால் அந்த வீட்டில் யாரும் அவரைக் கண்டு கொள்வதில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த நபர் தன்னுடைய செயலில் எதிர்வினையாற்ற யாரும் இல்லாததால், கொஞ்சம் கொஞ்சமாக மாறினார். இப்பொழுது அவர் கத்துவதில்லை கற்களை எரிவதும் இல்லை. அதைப் பார்த்த தந்தை எதிர்வினையாற்ற யாரும் இல்லாததால் அவருடைய சுபாவம் மாறியது. அதைப்போலதான் நாமும் தர்க்கம் பண்ணுகிறவர்களிடம் எதிர் தர்க்கம் பண்ணாமல் இருந்தால் அங்கு சண்டை உருவாக வாய்ப்பே இல்லை. இயேசு கிறிஸ்து கூட சீஷர்களிடம் கூறும் போது தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ள வழக்காடுபவனிடம் உன் அங்கியையும் கூட கொடுத்துவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் நடக்க பலவந்தம் பண்ணினால் அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்று ஆலோசனை கூறுகிறார்.
ஆம் பிரியமானவர்களே! நாம் எப்படி நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் எதிர்வினையாற்றுகிறோம்? என்று சற்றே சிந்திப்போம். ஒருவர் நம்மை குறித்த ஏதாகிலும் சொன்னால் நாம் பொறுமையை இழந்து அவர்களை கடிந்து கொள்கிறோம் அல்லவா! நாம் அப்படிச் செய்யாமல் சற்றே பொறுமையாக இருப்போம். நம் தேவன் நம்மை கனம் பண்ணுவார். இதைதான் தேவமனிதனாகிய மோசே செய்தார். மோசேயின் மனைவியின் மேலிருந்த கருத்து வேறுபாட்டினால் மோசேயின் உடன்பிறந்தோர் அவரை குற்றஞ்சாட்டும் போது, அவரோ தன்னை நியாயப்படுத்தும்படி ஒன்றும் பேசவில்லை. மோசே பேசியிருந்தால் ஆளுக்கொன்று பேச அது சண்டையாக மாறியிருக்கும். நிதானம் காத்தார். தேவனே அவருக்காக பேசினார். நாமும் இதை பின்பற்றுவோம். தேவனிடமிருந்து கனம் பெறுவோம்.
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
நமது சிறுவர் பங்காளர் திட்டத்தில் இணைந்துள்ள சிறுவர்கள் கர்த்தருக்குள் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864