By Village Missionary Movement
Wednesday, 18-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 18.09.2024
இரங்கும் தேவன்
"இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" - மத்தேயு 5:7
அமெரிக்காவில் ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு வாலிபன், தன் படிப்பு செலவிற்காக வீடு வீடாக பொருட்களை வினியோகிக்கும் தொழிலை, பகுதி நேரமாக செய்து கொண்டிருந்தான். ஒருநாள் தன் பொருட்கள் விற்காத சூழ்நிலையில், மிகுதியாக சுற்றித்திரிந்ததால் மிகுந்த களைப்பும், பசியும் எடுத்தது; ஒரு வீட்டின் கதவைத் தட்டினான், ஒரு பெண் வந்தாள். அவர்களிடம் தண்ணீர் கேட்டான், அவளுடைய சோர்வான முகத்தைப் பார்த்து அந்த பெண் தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் நிறைய பாலை கொடுத்தாள். பசியினால் வாடிய அந்த வாலிபன், அதை ஆவலோடு வாங்கி குடித்தான். அந்த பெண்ணிடம் நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றான். அந்தப் பெண் சிரித்து விட்டு, பரவாயில்லை உன் சரீரத்தை பார்த்துக் கொள் என்று கூறினார்கள். முன்பின் தெரியாதவர்கள், அன்பாக, பரிவாக பேசி, உபசரித்ததை மனதில் பதித்துக் கொண்ட அந்த வாலிபன். உதவி செய்த அந்தப் பெண்ணை மறக்கவில்லை.
வாலிபன் கஷ்டப்பட்டு படித்து மருத்துவர் ஆனார். ஒரு நாள் தன்னுடைய கிளீனிக்கிற்க்கு வந்த ஒரு பெண்ணை அடையாளம் கண்டு கொண்டார். அந்த பெண்ணின் நீண்ட நாள் வியாதிக்காக சிகிச்சை அளிக்க தீர்மானித்தார். நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் சுகம் அடைந்தார் அந்த பெண். ஒரு பெரிய தொகை டாக்டர் கேட்பார் என நினைத்தாள் அந்த பெண். ஆனால் அந்த டாக்டர் சிகிச்சைக்கான பில்லை கவரில் வைத்து, இதை டாக்டர் ஹவார்டு கெல்லி (ழடிறயசன முநடடல) செலுத்தி விட்டார் என கையெழுத்திட்டிருந்தது. அப்பொழுது அந்த பெண் ஆச்சரியமாய் அவரை பார்த்த போது பழைய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தினார் டாக்டர். அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் வடிந்தது. நாம் செய்கிற நன்மைக்கு இம்மையிலும் மறுமையிலும் பலன் உண்டு என்பதாக வேதம் கூறுகிறது.
1. 1.தொற்காள்:- அப் 9:36-42 தொற்காள் செய்த நன்மைக்கு, தொற்காளுக்கு புது வாழ்க்கை திரும்பவும் கொடுக்கப்பட்டது. இரக்கம் செய்த தொற்காள் இரக்கம் பெற்றாள்.
2. சாறிபாத் ஊர் விதவை:- எலியா தீர்க்கதரிசிக்கு செய்த நன்மைக்கு, நீடித்த நாட்கள் குடும்பம் முழுவதும் நன்மைகளை காண கர்த்தர் உதவினார். இரக்கம் பாராட்டிய சாறிபாத் ஊர் விதவை குடும்பத்துடன் இரக்கம் பெற்றாள். இந்த சிறியரில் ஒருவருக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று இயேசு கூறுகிறார். நாம் பிறருக்கு நல்ல சமாரியனைப் போல நன்மை செய்வோம். பரலோக ஞாபக புஸ்தகத்தில் நம் கிரியைகள் பதிவு செய்வோம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்!
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
தோழமை ஊழியர்களின் சுகத்திற்காக, அவர்கள் சந்திக்கும் கிராமங்களில் எழுப்புதல் உண்டாக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864