Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.09.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 17-Sep-2024

இன்றைய தியானம்(Tamil) 17.09.2024

 

இலவசம்

 

"விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்" - வெளி. 22:17

 

19 ஆம் நூற்றாண்டில் ஈரான் தேசத்தை சேர்ந்த வாலிபன் மன்சூர்சிங் இயேசுகிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொண்டார். பல் மருத்துவரான மன்சூர்சிங் இலவசமாய் மருத்துவப்பணி செய்து நற்செய்தியையும் அறிவித்து வந்தார். ஒரு சூழ்நிலையில் ஷிராய் என்னும் சிறையில் அவர் இருந்தபோது அங்கிருந்த அதிகாரி மன்சூர்சிங்கிடம் இருந்த புதிய ஏற்பாட்டை காண்பித்து இதன் விலை என்ன? என்றார். "புத்தகம் இலவசம்" என்றார் தாழ்மையுடன். அதிகாரி சிரித்துக்கொண்டே தகுதியற்ற புத்தகத்திற்கு சரியான விலை தான் இது என ஏளனம் செய்தார். பின்னர் அந்த அதிகாரி பக்கத்தில் இருந்த ஒருவரிடம், இந்த மின் விளக்கை அதிக விலை கொடுத்து வாங்கியதாக கூறினார். மன்சூர்சிங் ஜன்னல் வழியாக சூரியனைக் காண்பித்து பகல் முழுவதும் ஒளியைத் தரும் இதற்கு எவ்வளவு விலை கொடுப்பீர்? என்றார். பதில் கூற இயலாத அதிகாரியிடம், மன்சூர் மனிதர்களால் படைக்கப்பட்ட படைப்புகளுக்கோ அதிக விலை தேவைப்படுகிறது. ஆனால் விலைமதிக்க முடியாத நீர், காற்று, சூரியன், சந்திரன் போன்றவற்றை இலவசமாகவே தருகிறார். வேத புத்தகமும் அப்படியே! இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தத்தை சிந்தி பாவ மன்னிப்பு, மீட்பு என்பதனையும் இலவசமாகத் தந்துள்ளார் என்றார். தன் தவறை உணர்ந்த அதிகாரி மன்சூரிடம் மன்னிப்புக் கேட்டார். 

 

அப்போஸ்தலர் மூன்றாம் அதிகாரத்தில் பேதுருவும், யோவானும் தேவாலயத்திற்கு போகும்போது அங்கு பிறவி சப்பாணி ஒருவன் இவர்களைப் பார்த்து பிச்சை கேட்டான். அதற்கு அவர்கள் வெள்ளியும், பொன்னும் எங்களிடத்தில் இல்லை. என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன் என்று சொல்லி இயேசுவின் நாமத்தினால் எழுந்து நட எனக் கூறினார்கள். பிறவிச் சப்பாணி எழுந்து, நின்று, நடந்து, குதித்து தேவனை மகிமைப்படுத்தினான். அற்புத சுகத்தை இலவசமாய் பெற்றுக் கொண்டான்.

 

ஆம், எனக்கன்பானவர்களே! மனிதரின் பாவம் மன்னிக்கப்பட எவ்வளவு விலை கொட்டிக் கொடுத்தாலும் மன்னிப்பு இல்லை. ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாம் ஒரே பலியாய் சிலுவையில் ஜீவனை விட்டார். நம் பாவத்தை இயேசுவிடம் அறிக்கையிட்டு அவரை நோக்கிப் பார்ப்போமானால் இரட்சிப்பு இலவசமே! தீராத பாவ, வியாதி, கட்டுகளில் விடுதலை பெற இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள்! விலையேறப்பெற்ற இரட்சிப்பு, விடுதலை, சுகம், குறைவுகள் நீங்கும். ஆசீர்வாதம் அனைத்தையும் ஆண்டவர் இலவசமாய் கொடுக்க காத்திருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் அதை எந்த பணமுமின்றி வாங்கிக் கொள்ளலாம்.

- Sis. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு: 

தெபொராள் ஊழியங்களின் ஜெபங்கள் கேட்கப்பட, அவர்கள் ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet