Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.09.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 01-Sep-2024

இன்றைய தியானம்(Tamil) 01.09.2024 (Kids Special)

 

நன்றி மறக்கக்கூடாது

 

"என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” - சங்கீதம் 103:2

 

செழித்து வளர்ந்திருந்த அந்த புல்வெளியில் மான் ஒன்று வெகு சந்தோஷமாய் மேய்ந்து கொண்டிருந்தது. நல்ல கொழுத்த மான் அது. அப்போது இரண்டு மூன்று வேடர்கள் வேட்டையாட அந்த வழியாக வந்தனர். அவர்களின் கண்களில் இந்த மான் தென்பட்டது. எவ்வளவு கொழுத்த மான், இதை இன்று எப்படியும் வேட்டையாடிவிட வேண்டுமென எண்ணி அதன்மீது அம்பை செலுத்தினார்கள். நல்ல வேளையாக அந்த அம்பு மான் மீது படவில்லை. தனக்கு ஆபத்து வந்துவிட்டது என புரிந்து கொண்ட மான் மிக வேகமாக ஓட ஆரம்பித்தது.

 

வேடர்களும் மானைத் துரத்தினார்கள். மான் காற்றாய் பறந்தது. ஒரு புதருக்குள் போய் ஒளிந்துகொண்டது. புதரில் படர்ந்திருந்த கொடிகள் தன் இலைகளால் மானை மறைத்துக்கொண்டன. "மானே கவலைப்படாதே, அந்த வேடர்களின் கண்களில் படாதவாறு உன்னை இலைகளாகிய நாங்கள் பாதுகாப்போம்" என்றன. மானும் சப்தம் போடாமல் நின்றது. வேடர்கள் மானைக் காணாது திகைத்தனர். சற்றுநேரம் அமைதியாக நின்றனர்.  

 

ஒளிந்திருந்த மான் வேடர்கள் சென்றுவிட்டதாக நினைத்தது. அப்பாடி தப்பித்தோம் என்று எண்ணி, தன்னை வேடர்களின் கண்களில் விழாதவாறு மறைத்துக் காப்பாற்றிய கொடியின் இலைகளை "இனி நீங்கள் எனக்குத் தேவையில்லை" என்பதுபோல பரக் பரக் என்று கடித்துத் தின்ன ஆரம்பித்தது. அப்படித் தின்னும்போது ஏற்பட்ட சத்தத்தினாலும், இலைகள் தின்னப்பட்டதால் ஏற்பட்ட இடைவெளியாலும் மானின் இருப்பிடத்தை வேடர்கள் தெரிந்து கொண்டார்கள். கொஞ்சமும் தாமதிக்காது மானை வேட்டையாடினார்கள். நன்றி கெட்ட மான் இறந்துபோனது.  

 

அன்பு செல்லப்பிள்ளைகளே! கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நாமும் இப்படி எத்தனை முறை நடந்துகொண்டிருக்கிறோம். பிறர் நமக்கு செய்த நன்மையை மறந்து நன்றியற்றவர்களாக நடந்திருக்கிறோமல்லவா? நமக்கு நன்மை வரும்வரை அவர்களோடு இருந்துவிட்டு, நம் வேலை முடிந்தவுடன் எஸ்கேப்பாகி விடுகிறோமல்லவா? இயேசப்பா பிள்ளைகள் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. பிறர் செய்த சிறு உதவிக்கும் நன்றி சொல்லி பழகவேண்டும். மற்றவர்கள் நமக்கு சின்ன உதவி செய்திருந்தாலும், நாம் அவர்களுக்கு பெரிய உதவி செய்ய வாய்ப்பைத் தேடவேண்டும்.

 

இயேசு கிறிஸ்துவும் நன்றியுள்ள இதயத்தை எதிர்பார்க்கிறார். அவர் நமக்கு அனுதினமும் தரும் ஜீவன், சுகம், பெலன் மற்றும் ஏராளமான நன்மைகளைத் தந்துகொண்டேயிருக்கிறாரே! இவற்றிற்கெல்லாம் நீ அவருக்கு நன்றி சொல்லுகிறாயா? யோசித்துப் பார்த்து நன்றியுள்ள பிள்ளையாய் வாழ பிரயாசப்படு. Ok வா!

- L. பிரபாகரன்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al