By Village Missionary Movement
Friday, 30-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 30.08.2024
நீங்களும் சீஷர்தான்
"…தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார்" - 1 பேதுரு 2:21
ஊழியக்கார குடும்பம் ஒன்று காஷ்மீர் மாநிலத்திற்கு ஊழியம் செய்யும்படி புறப்பட்டுச் சென்றது. ஆனால் அவர்களுக்கோ அங்கு பேசும் மொழி தெரியாது. வீட்டிலிருந்து ஜெபம் பண்ணி, வேதத்தை வாசித்து, இந்தி மொழியையும் கற்றுக் கொண்டு வந்தனர். ஒரு நாள் இரவு நேரத்தில் பெரியவர் ஒருவர் வந்து, ஊழியரின் வீட்டுக் கதவை தட்டி, குட்டி போடும் நிலையில் உள்ள தன்னுடைய ஆடு காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது. நீங்கள் ஜெபிப்பவர்கள் என்று கேள்விப்பட்டேன், அந்த ஆடு பத்திரமாக இருக்க வேண்டும் என்று ஜெபியுங்கள் என்று சொல்லிச் சென்றுவிட்டார். அவ்ஊழியக்காரர் ஆடு தானே காணாமல் போனது என்று அலட்சியமாக இல்லாமல், அன்று இரவு முழுவதும் ஜெபித்தார். அடுத்த நாள் அந்தப் பெரியவர் வந்து கொடிய மிருகங்கள் வாழும் இந்த காட்டில் தன்னுடைய ஆடு குட்டி போட்டு, குட்டியோடு கூட சுகத்தோடு வந்துவிட்டது. இனி நானும் அந்த இயேசுவை தெய்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.
புதிய ஏற்பாட்டில் பவுலாக மாறின சவுலை நாம் அறிவோம். இவர் ஸ்தேவானைக் கொலை செய்யும் போது கொலை செய்தவர்களுடைய கூட்டத்தில் முக்கிய நபராக இருந்தார். மேலும் கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்தினார். இப்படி இருந்த சவுலை ஆண்டவர் ஒருநாள் சந்தித்தார். உடனே சவுல் இரட்சிக்கப்பட்டு, சற்றும் தாமதமின்றி, ஞானஸ்நானம் பெற்று, இயேசுவை பிரஸ்தாபப்படுத்தத் தொடங்கினார். சபையை துன்பப்படுத்தின சவுல் பவுலாக மாறினார். பெரிய எழுப்புதல் உண்டானது.
பிரியமானவர்களே! சூழ்நிலைகள் சாதகமாக இல்லை என்று ஊழியம் செய்வதிலும், சுவிசேஷம் அறிவிப்பதிலும் தடுமாறுகிறீர்களோ? மொழி தெரியாத இடத்திலும், சாதகமற்ற சூழ்நிலையிலும், தேவன் தமது வேலையை செய்து கொண்டேதான் இருக்கிறார். ஏற்ற நேரத்தில் சூழ்நிலைகளை அவரே சரி செய்து, காரியங்களை வாய்க்கச் செய்வார். ஆண்டவருடைய வார்த்தைக்கு எதிர்த்து நிற்காமல் கீழ்ப்படிந்து அவர் வழி நடத்துதலின்படி சென்றால் போதும். அற்புதங்கள் நடக்கும், மாற்றங்கள் உண்டாகும். ஆண்டவர் நாமம் மகிமைப்படும். உங்களை பயன்படுத்துவார். கர்த்தருடைய கரத்தில் உம் சித்தம் செய்ய நான் இருக்கிறேன் என்று நம்மை அர்ப்பணிக்கும் போது, இயேசுவைப் பின்பற்றுகிற நம்மைக் கொண்டு அநேகரை சீஷர் ஆக்குவது அவருக்கு லேசான காரியம். அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுகிற நாம் அவரைப் போலவே மாறுவோம்! அனேகரை சீஷர்களாக்குவோம்!!
- Sis. எஸ்தர் செல்வி
ஜெபக்குறிப்பு:
நமது மிஷனெரிப் பிள்ளைகளின் கல்வி கட்டணத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864