Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26.08.2024
Share:

By Village Missionary Movement

Monday, 26-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 26.08.2024

 

உங்களுடைய மதிப்பு என்ன?

 

"…கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே" – 1 பேதுரு 1:19

 

கி.மு. 75 ல் ஜூலியஸ் சீசர் என்ற ரோம பிரபுவை பணத்திற்காக கடத்திச் சென்றதாக ஒரு கதை சொல்லுவார்கள். அவரை விடுவிக்க 20 தாலந்து வெள்ளி கேட்டனர். இந்தத் தொகையை கேட்ட போது சீசர் நகைத்து, மீட்புப் பணத்தை ஆயிரம் தாலந்துகளாக உயர்த்தும் படி கூறினார். ஏனெனில் அவர் 20 தாலந்துகளுக்கு மேலாக விலையேறப்பெற்றவர் என்பதை நன்கு உணர்ந்து இருந்தார். கடத்திச் சென்றவர்களோ அவர் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.  

 

சீசர் கர்வத்துடன் தன் மதிப்பை பணத்தினால் நிர்ணயித்துக் கொண்டதற்கும், தேவன் நம் ஒவ்வொருவர் மேலும் வைத்துள்ள மதிப்பிற்கும் எத்தனை பெரிய வித்தியாசம்! நம்முடைய மதிப்பை பணத்தினால் அளந்து விட முடியாது; நமது பரம பிதா நமக்காக என்ன செய்தார் என்பதே நமது மதிப்பை காட்டுகின்றது.             

 

தேவன் என்ன விலைக்கிரயம் செலுத்தி நம்மை இரட்சித்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்து, நம்மைப் பாவங்களிலிருந்தும் சாபங்களிலிருந்தும் மீட்க பிதாவாகிய தேவன் விலைக்கிரயம் செலுத்தினார். " உங்கள் முன்னோர்களால், பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும், பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே." 

 

பிரியமானவர்களே! தேவன் நம் மேல் வைத்த அளவற்ற அன்பினால் தம்முடைய ஒரே குமாரனை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, குமாரனின் இரத்தத்தையே நமக்கு விலைக்கிரயமாக செலுத்தி, நம்மை மீட்கும் பொருட்டு மரணத்தை மேற்கொண்டு உயிர்த்தெழுந்தார். அந்த அளவிற்கு நீங்கள் அவரில் விலையேறப் பெற்றவர்கள். சீசர் தன்னுடைய மதிப்பை பணத்தை வைத்துக் காட்டினார். ஆனால் நம்முடைய மதிப்போ வானத்தையும் பூமியையும் படைத்த இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது. தேவன் நம்மை மீட்டெடுக்க செலுத்தின விலைக்கிரயம் தான் நம் மதிப்பை நிர்ணயிக்கும். ஆகவே உங்களைக் குறித்து குறைவாய் எண்ணவேண்டாம். உங்களது மதிப்பை உணருங்கள். நீங்கள் விலையேறப்பெற்றவர்கள். அல்லேலூயா!

- A. பியூலா

 

ஜெபக்குறிப்பு:

பசித்தோர்க்கு உணவளிக்கும் திட்டத்தில் பயனடைபவர்கள் ஆண்டவரின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş amgbahis amgbahis giriş casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ grandpashabet jojobet jojobet giriş