Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.08.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 25-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 25.08.2024 (Kids Special)

 

வெஸ்லியின் ஜெபம்

 

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” - 1 யோவான் 1:9

 

என்ன குட்டிஸ் ! Sunday என்றாலே சந்தோஷம்தான். ஒவ்வொரு வாரமும் Story கேட்பது உங்களுக்கு பிடிக்கும் தானே! இன்றைக்கு ஒரு திருடன் மனம் மாறிய உண்மை சம்பவத்தை கேட்கலாமா? ஜான்வெஸ்லி ஊழியத்தின் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அப்படி ஒரு நாள் ஊழியம் செய்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஒரு திருடன் அவரைக் கத்தியை காட்டி, மிரட்டி உன்னிடம் உள்ள பணத்தை தா எனக் கூறி வழிமறித்தான். உடனே ஜான்வெஸ்லி தன்னிடம் இருந்த கொஞ்ச பணத்தையும் கொடுத்துவிட்டார். அப்பொழுது ஜான் வெஸ்லி, "நீ ஒரு நாள் இந்தத் தொழிலை செய்வதற்கு வருந்துவாய்; அப்பொழுது, இயேசுவிடம் வா, உன் பாவங்களை மன்னித்து, புதிய வாழ்க்கையைத் தருவார்" என்றார். அந்தத் திருடனும் கிடைத்தவரை லாபம் என்று நினைத்து எதுவும் பதில் சொல்லாமல் சென்று விட்டான்.  

 

ஜான்வெஸ்லி அந்த திருடனுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து அந்த தொழிலை செய்து கொண்டிருந்த திருடன் ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, அநேகருடைய அழுகுரல், அவர்கள் இடும் சாபங்கள் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். பின் அவனால் தூங்க முடியவில்லை. இப்படி ஒரு திருட்டுத் தொழிலை செய்து அநேகரை கண்ணீர் வடிக்கச் செய்கிறேனே நான் உயிர் வாழவே தகுதி கிடையாது என்று நினைத்தான். அப்பொழுது தான் ஜான் வெஸ்லியின் வார்த்தைகள் அவன் உள்ளத்தில் ஒலித்தது. இயேசுவிடம் வா உன் பாவத்தை மன்னிப்பார் என்ற வார்த்தைகள் ரீங்காரமிட்டது. உடனே இயேசுவே என் பாவத்தை மன்னியும் என்று அழுதான். மனங்கசந்து பாவங்கள் ஒவ்வொன்றாய் இயேசுவிடம் சொல்ல ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் மனதில் சந்தோஷம்! ஆலயம் செல்ல ஆரம்பித்தான். நண்பர்கள் உதவியுடன் சிறிய கடை வைத்து வியாபாரம் செய்தான். ஜான் வெஸ்லி பேசின கூட்டத்தில் கலந்து கொண்டு அவரை சந்தித்தான். ஆண்டவர் அவனைத் தொட்ட விதத்தைச் சொல்லி மகிழ்ச்சி அடைந்தான். ஜான் வெஸ்லியோ என் ஜெபம் வீண் போகவில்லை என்று தேவனைத் துதித்தார். 

 

பார்த்தீங்களா குட்டிஸ்? இதுதான் மனந்திரும்புதல். திருடன் மனம் திரும்புவதற்கு ஜான் வெஸ்லியின் ஜெபம் காரணமாய் இருந்தது போல உங்கள் ஜெபமும் அநேகரை கிறிஸ்துவண்டை அழைத்து வரும். அப்போ ஜெபிக்க மறக்கலாமா? கண்டிப்பாக மறக்க கூடாது. ஓகே.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al