Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.08.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 21-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 21.08.2024

 

இயேசுவால் எல்லாம் கூடும்

 

"...மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்…" - மத்தேயு 19:26

 

அமெரிக்காவில் "நெப்போலியன் ஹிப்" என்ற மிகப்பெரிய தொழில் அதிபருக்கு இரண்டு காதுகளுமே இல்லாமல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர் என் பிள்ளைக்கு காது கேட்க செய்ய எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றார். மருத்துவர்கள் அதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். மனுஷரால் கூடாதவைகள் தேவனாலே கூடும் என்று நான் அறிவேன் என்று சொல்லி, குழந்தைக்காக 9 வருடங்கள் விடாமல் ஜெபித்துக் கொண்டு வந்தார். நெப்போலியன் ஹிப்-ன் தாழ்மையான கண்ணீரின் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. காதுகள் அற்ற அந்த மகன் சத்தங்களை உணர்ந்ததாகக் கூறினான். விசுவாசம் உள்ள தன் ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும்படி, குழந்தையைப் பற்றி அறிந்த மருத்துவர்களையும், சகல உற்றார் உறவினர்களையும் அழைத்து விருந்து செய்தார். அந்த நன்றி செலுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் சொன்ன சாட்சி, அநேகரை தேவனைப் பற்றும் விசுவாசத்தில் நடத்தியது.

 

வேதாகமத்தில் தேவனுடைய செயல்கள், இயற்கைக்கு அப்பாற்பட்டவைகள். ஆபிரகாம் - சாராளுக்கு முதிர் வயதில் பிறந்த ஈசாக்கு, உலகிற்கு சாட்சியாய் இருக்கிறார். சகரியா - எலிசபெத்திற்கு முதிர் வயதில் பிறந்த யோவான்ஸ்நானகன் புதிய ஏற்பாட்டில் சாட்சியாக உள்ளார். பார்வையற்ற பிறவி குருடருக்கு கண் தெரிந்த செயல் இயேசுவின் வல்லமையை இன்றும் உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறது. லாசருவின் சரீரம் நான்கு நாட்கள் கல்லறைக்குள்ளிருந்து உயிர்த்தெழுந்த செயல், யூதருக்கு விசுவாசத்தை கொடுத்தது. இன்றும் இயேசுவை விசுவாசிப்போர் அரிய பெரிய காரியங்களை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

பிரியமானவர்களே, என் வாழ்வில் இது நடக்காதா என ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா? இந்தக் காரியம் நடப்பதற்கான சாதகமான சூழ்நிலையெல்லாம் குறைந்து கொண்டே வருகிறதே. என் வயது கூடிக் கொண்டே போகிறதே என சோர்வோடு வாழந்து கொண்டிருக்கிறீர்களா? கலங்காதீர்கள். நாம் ஆராதிக்கும் தேவன் எதையும் செய்ய வல்லவர். அவர் உங்கள் வாழ்வில் செய்ய நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும். விசுவாசியுங்கள் எல்லாம் கூடும்.

- Mr. சாமுவேல் மோரீஸ்

 

ஜெபக்குறிப்பு:

ஆமென் வில்லேஜ் டிவி மூலம் புதிதாக கிட்ஸ் டிவி ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al