By Village Missionary Movement
Tuesday, 20-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 20.08.2024
விசுவாசம்
"...உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,…" - மாற்கு 5:34
சில வருடங்களாக ஒரு கிராமத்தில் மழையில்லாமல் இருந்தது. ஒரு சில கிறிஸ்தவர்கள் அந்த கிராமத்தில் இருந்தனர். எல்லோரும் சபைக்குச் சென்று மழைக்காக உபவாசித்து ஜெபிக்க சென்ற போது ஒரு சின்ன பையன் மட்டும் குடையை தன் கையில் எடுத்துச் சென்றான். ஒருவர் அந்தப் பையனிடம் ஏன் குடையை எடுத்துக் கொண்டு வருகிறாய் என்று கேட்டபோது, "நமது ஜெபத்தைக் கேட்டு ஆண்டவர் மழையைத் தருவார். நான் நனைந்து கொண்டே வீடு செல்ல வேண்டுமல்லவா அதனால்தான் நான் குடையை எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொன்னானாம். பாருங்கள் அவனது விசுவாசம் எவ்வளவு பெரியது என்று! அதுபோலவே சிறு பையனின் விசுவாசத்தைக் கனம்பண்ணின தேவன் அந்த நாளில் ஒரு பெரிய மழையைக் கட்டளையிட்டார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் பலவிதமான அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து காண்பித்தார். பலவித வியாதியஸ்தர்களை சுகமாக்கினார். பார்வையற்றவர்களுக்கு பார்வையையும், காது கேளாதவனுக்கு செவித்திறனையும், முடவனை நடக்கும்படியும் செய்தார். இதனால் அனேகருடைய விசுவாசம் இயேசுவின் மேல் இருந்தது. இயேசுவும் ஒரு சிலரின் விசுவாசத்தைக் கண்டு பாராட்டினார். அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயின் விசுவாசத்தை நாம் அறிவோம். அவள்தான் 12 வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ. இந்த ஸ்திரீ அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளை எல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டு அவருடைய வஸ்திரத்தை தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு சுகமானாள். இதற்கு எல்லாம் காரணம் அந்த ஸ்திரீயின் விசுவாசம் மாத்திரமே.
பிரியமானவர்களே! காந்தம் இரும்பை எப்படி ஈர்த்துக் கொண்டதோ அதேபோல பெரும்பாடுள்ள ஸ்திரீயின் விசுவாசம் இயேசுவிடம் இருந்த சுகமளிக்கும் வல்லமையை ஈர்த்துக் கொண்டது. பரிபூரண சுகமும் பெற்றாள். விசுவாசம் இல்லாத ஜெபம் "தோட்டா இல்லாத துப்பாக்கிக்குச் சமம்". விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். 12 வருடமாய் கஷ்டப்பட்டவளுக்குள் இருந்த விசுவாசம் உங்களுக்குள் இருந்தால் விடுதலை, சுகம் நிச்சயம். விசுவாசமில்லாமல் இருப்பது தேவனுக்கு பிரியமில்லாத காரியம். எனவே நம்முடைய விசுவாசம் தேவன் மீது மாத்திரமே இருக்கட்டும். ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசத்தை வர்த்திக்க அவரை நோக்கி வேண்டிக் கொள்ளுவோம்.
- Sis. சலோமி
ஜெபக்குறிப்பு:
இனியவளே என்ற பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி மூலம் அனேக பெண்கள் கிறிஸ்துவுக்கு என்று தெபொராள்களாக எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864