By Village Missionary Movement
Tuesday, 13-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 13.08.2024
கரிசனை உள்ளம்
"கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி" - லூக்கா 7:13
ஜெர்மன் நாட்டிலே மிகவும் ஏழையான குடும்பம் ஒன்று இருந்தது. அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் சிறுவனாயிருக்கும் போதே அவனுடைய பெற்றோர்கள் மரித்துவிட்டனர். சிறுவன் அனாதையானான். நன்றாக Guitar வாசித்து பாடும் திறமை பெற்றிருந்தான். குளிரான ஓர் இரவில் தனியாக Guitar வாசித்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தான். அவனது விரல்கள் மீட்டிய இனிய ஓசையினை கேட்ட முதிய தம்பதியர் அவனை தங்கள் வீட்டிற்குள் அழைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுத்தனர். அவன் அனாதை என்று தெரிந்தவுடன் அவனை தங்கள் வீட்டிலேயே தங்க வைத்து பராமரித்து பட்டதாரியாக்கினார்கள். இறையியல் கற்று தேர்ந்த அவர்தான் சமய சீர்திருத்தத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்ட மார்ட்டின்லூத்தர். அந்தத் தம்பதியர் சிறுவனாகிய மார்டின்லூத்தர் மீது கரிசனை கொண்டதினால் தான் ஓரு மாபெரும் சீர்திருத்த விடிவெள்ளியாக திருச்சபையில் தோன்றினார்.
ஆண்டவராகிய இயேசு தாம் உயிரோடு இருந்த நாட்களில் ஜனங்களைக் கண்டபோது மனதுருகினார். மனதுருக்கம் உள்ளவராகவே அற்புதங்களைச் செய்தார். பலவித சம்பவங்கள் இயேசுவானவர் மனதுருகினதை வெளிப்படுத்துகிறது. அதில் ஒன்றுதான் நாயீன் ஊர் விதவை சம்பவம். கைம்பெண்ணாயிருந்த அவளுக்கு ஒரு மகன். அவனும் இறந்து போனான். மகனை சடலமாக சுமந்து சென்றதை காணும் போது கண்ணீர் வடிக்கிறார். இயேசு வந்து அந்தப் பாடையைத் தொட்டு, மனதுருகி வாலிபனே எழுந்திரு என்று சொல்லி மரித்துப்போன வாலிபனை உயிரோடு எழுப்பினார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். இதில் ஒன்றை கவனியுங்கள், பிள்ளைக்காக தாயோ தகப்பனோ இயேசுவிடம் வந்தனர். ஆனால் இயேசுவோ ஒரு தாயின் கண்ணீரைக் கண்டு மனதுருகி தேடிச் சென்று அற்புதம் செய்கிறார். இயேசுவின் மனதுருக்கத்தையும், கரிசனை உள்ளத்தையும் நமக்கு காண்பிக்கிறது.
பிரியமானவர்களே! நாமும் பிறர் மீது இரக்கம் அதாவது கரிசனை காட்டுவதில் இயேசுவைப் போல மாற வேண்டும். கரிசனை காட்டுவதில் அவரின் முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும். "கரிசனை உள்ளம் என்பது ஒரு தலை சிறந்த பண்பு". பிதாவாகிய தேவன் நம்மீதுள்ள கரிசனையினால் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவருடைய சாயலாக படைக்கப்பட்ட நமக்கும் இந்த கரிசனை உணர்வும், உள்ளமும் மிகவும் தேவை! இதை வாஞ்சித்துப் பெற்றுக் கொள்வோம்.
- Mrs. ரூபி அருண்
ஜெபக்குறிப்பு:
மொராய் சிட்டி மைதானத்தில் தேவ ஆளுகை இருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864