Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.08.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 11-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 11.08.2024 (Kids Special)

 

சாதிக்கலாம் நீ

 

"தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்." - சங்கீதம் 67:2

 

குட்டிச் செல்லங்களே! ஒவ்வொரு வாரமும் கதை கேட்கிறீங்கல்ல அது உங்களுக்கு Useful - ஆ இருக்குதா? ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடக் கூடாது. கேட்கிற நல்ல விஷயங்களின்படி நடக்க இயேசப்பா உங்களுக்கு உதவி செய்வார். Ok குட்டீஸ், கதை கேட்க நீங்க ரெடி தானே!

 

கயல் விளையாட்டில் ரொம்ப உற்சாகமாய் இருப்பாள். பேஸ்கட் பால் விளையாடுவது, பயிற்சிக்கு செல்வது என்று எப்பவும் பிஸியாக இருப்பாள். அன்று காலையில் எழுந்ததிலிருந்து டிவி பார்த்தவள் T.V யை Off பண்ணவேயில்லை. evening பேஸ்கட் பால் பயிற்சிக்கு போவதைக் கூட மறந்து, தொடர்ந்து T.V பார்த்துக் கொண்டே இருந்தாள். இதற்குமேல் அம்மாவால் சும்மா இருக்க முடியவில்லை. "கயல் எதுக்கும்மா practice போகவில்லை?" என்று கேட்டார்கள். இல்லையம்மா அதெல்லாம் எனக்கு செட் ஆகாது என்றால் கயல். என்னாச்சு? எதுக்கு? என்று கனிவான குரலில் கேட்டாங்க அம்மா. நேத்து எங்க School- ல் Long Jump செலக்ஷன் வச்சாங்களா? என்று சொல்லும் போதே கண்கள் கலங்கியது. நானும் கலந்து கொண்டேன். Sir, எல்லாரையும் வரிசையில் நிற்க வைத்து நீளம் தாண்டச் சொன்னாரு. நான் வேகமா ஓடிவந்ததில் பயங்கரமா பல்டி அடிச்சி விழுந்துட்டேன். எல்லா பசங்களும் சிரிச்சாங்க என்று சொல்லி "ஓ" வென்று அழத்தொடங்கினாள்.

 

குட்டீஸ் நீங்களும் School - ல நடந்த விஷயங்களை அப்பா அம்மாகிட்ட share பண்ணுவீங்களா? Very good. தொடர்ந்து கயல் என்ன சொன்னாள் தெரியுமா? Girls- க்கெல்லாம் இந்த விளையாட்டு செட் ஆகாதும்மா. நான் சும்மா படித்து விட்டு, T.V பார்த்துக்கிட்டு வீட்டிலேயே இருக்கிறேன்அம்மா. அப்படியா ok அம்மா கேட்கிறதுக்கு பதில் சொல்லு. காலையில் இருந்து இந்த TV - யை பார்த்துக் கொண்டிருக்கிறாயே இதை யார் கண்டுபிடித்தது தெரியுமா? என்று கேட்டார்கள் அம்மா. "ஜான் யோகி பியார்டு" என்று சட்டுன்னு பதில் சொன்ன கயலின் கன்னத்தை தட்டிக் கொடுத்து " super" என்று சொன்னார்கள் அம்மா.

 

அவர் TV ஆராய்ச்சியில் இருக்கும் போது, திடீரென்று அவர் கையில் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து கிட்டத்தட்ட அவர் கை எரிந்து விட்டது. அதற்காக பயந்து அந்த ஆராய்ச்சியை அவர் விட்டுவிடவில்லை. தொடர்ந்து கடினமாக உழைத்தார். அடுத்த மூன்று வருடங்களில் தெளிவான தொலைக்காட்சிப் பெட்டியை கண்டுபிடித்து இந்த உலகிற்கு கொடுத்தார். பல கஷ்டங்களை கடந்து வந்தவர்கள்தான் சாதிக்க முடியும் என்ற அம்மாவின் நம்பிக்கையான வார்த்தைகள் கயலுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது.

 

குட்டி செல்லங்களே! கயல் அம்மாவின் வார்த்தைகள் உன்னையும் உற்சாகப்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன். நீயும் ஆண்டவருடைய தயவினால் சாதிக்கமுடியும். Ok

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al