By Village Missionary Movement
Saturday, 10-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 10.08.2024
சிறு காற்று
“…உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக" - கொலோசெயர் 4:6
உகியோவிலுள்ள நீதிமன்றம் ஒரு தனித்துவம் வாய்ந்த முறையில் கட்டப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றத்தின் வடக்கே விழும் மழைத்துளிகள் அந்த கட்டிடத்தின் மேல் வழிந்து ஜெயிண்ட் கிளாரன்ஸ் வளைகுடாவிற்கு சென்று சேரும். அந்தக் கட்டிடத்தின் தெற்கு பகுதியில் விழும் மழைத்துளிகள் மிசிசிப்பி ஆற்றில் கலந்து மெக்சிக்கோ வளைகுடாவிற்கு சென்று சேரும். மழைத்துளிகள் வடக்கே போய் விழப்போகிறதா? அல்லது தெற்கே போய் விழப் போகிறதா? என்பதை அதன் மீது வீசும் சிறு தென்றல் காற்று நிர்ணயிக்கிறது. ஒரே மழைத்துளிகள் தான் கட்டிடத்தின் மீது விழுந்தன. ஆனால் அவை சென்று சேரும் இடத்திற்கு இடையே உள்ள தொலைவு சுமார் 2000 மைல்.
அதேபோல் நாம் பிறருக்கு செய்யும் செயல்களும், பேசும் வார்த்தைகளும் பிறரின் பாதையை மாற்றி விடும். நாம் அவர்களிடம் காட்டும் கருணை, அன்பு, தேவ வார்த்தை அவர்களை பாதாளத்திற்கு செல்லும் வழியில் இருந்து பரலோக பாதையில் கொண்டு வந்து விடும். ஒரு சமாரியன் வழியிலே குற்றுயிராய் கிடந்த ஒருவனுக்கு காட்டிய அன்பால், கரிசனையால் "நல்ல சமாரியன்" என்ற அடைமொழியோடு வேதத்தில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் தன்னை அடிமையாக இழுத்து வந்த சீரிய படைத்தளபதி நாகமானிடம் அன்புடனும், கரிசனையுடனும் அந்த சிறு பெண் சொன்ன வார்த்தை படைத்தலைவனை மட்டுமின்றி சீரிய தேசம் முழுவதும் தேவனை அறிய வழி வகுத்தது.
நாம் பிறருடன் பேசும் காரியங்கள், செய்யும் செயல்கள் எப்படி இருக்கின்றன என்பதை நாம் சிந்திப்போம். பல வேலையாய் அவசரத்தில் சென்றிருப்பான் சமாரியன். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவனுக்கு உதவுவதற்காக தன் நேரம், பொருட்கள், பணம் எல்லாவற்றையும் அவனுக்காக செலவழித்தான். நமக்கு கொடுக்கப்படுகிற அனைத்தையும் அநேகருக்கு பயனுள்ள வகையில் எப்படி மாற்றுவது என சிந்தித்து பலருக்கு பயனுள்ள வகையில் மாற்றும் போது அது அவர்களின் வாழ்வை மாற்றும்.
இதை வாசிக்கும் அன்பரே! உங்களுக்குரியதை பிறரோடும், தேவையுள்ளவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கு வசதி வாய்ப்புகள் இல்லையே; என்னிடம் பகிர்ந்து கொள்ள என்ன உள்ளது என்கிறீர்களா? தேவனின் இரத்தத்தால் உங்கள் உள்ளம் கழுவப்பட்டுள்ளது. உங்கள் உதடுகளால் நன்கு பேசும் திறன் உள்ளதே! அது போதும். பிறருடன் வீண் வார்த்தைகளை பேசாமல் கர்த்தரின் வார்த்தையை, கர்த்தரின் நாமத்திற்கு மகிமையுண்டாக்கும் வார்த்தையை மட்டுமே பேசுங்கள். அவர்கள் உள்ளம் திறக்கப்படும். தேவனுக்கு நேராய் திரும்பும். தினமும் வாசிக்கும் தேவ வார்த்தையை கொண்டு பேசுங்கள். அனேகரை தேவனின் ராஜ்யத்திற்கு நேராக வழி நடத்துவோம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
முகாமில் பங்கு பெறுகிற ஒவ்வொரு வாலிபர்களும் பரிசுத்த ஆவினால் நிரப்பப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864