By Village Missionary Movement
Tuesday, 06-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 06.08.2024
சோதனை
“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” - எரேமியா 17:7
அப்பள்ளியிலேயே ஓட்டப்பந்தயத்தில் சிறந்தவன் என்ற பெயர் ராஜனுக்கு உண்டு. அவன் அப்பள்ளிக்கு பெற்றுத் தந்த பரிசுகள் ஏராளம். அதே பள்ளியில் பீட்டர் என்ற மாணவன் புதிதாக சேர்ந்தான். பீட்டர் எந்த போட்டியானாலும் முழங்கால்படியிட்டு ஜெபித்து விட்டுத்தான் செல்வான், முதல் பரிசையும் வென்று விடுவான். ராஜன் இருமுறை பீட்டரிடம் தோற்றான். கோபமடைந்த ராஜன் "இந்த முறை எனக்குத்தான் வெற்றிக் கோப்பை" என சூளுரைத்துக் கொண்டான். போட்டியன்று முதல் ஆளாக ஓடி வந்தான் ராஜன். ஆனால் போட்டியில் பீட்டருக்குத்தான் முதல் பரிசு என அறிவிக்கப்பட்டபோது அதிர்ந்து போனான் ராஜன். காரணம் அவனுக்கு குறித்திருந்த இரண்டாவது தடத்திலிருந்து மாறி, நான்காவது தடத்தில் ஓடி ஏமாற்றி வெற்றியை வாங்க நினைத்த ராஜன் முடிவில் வெட்கத்தால் தலை குனிந்தான்.
வேதத்திலும் கூட தன்னை செழிப்பான தேசமாகிய கானானுக்கு அழைத்து வந்த தேவன், நிச்சயமாக பஞ்சகாலத்திலும் போஷிப்பார் என்று நம்பாதபடியினால் ஆபிரகாம் எகிப்திற்கு சென்று பல சோதனைக்கு உள்ளானார். அதேபோலவே, மோசே பல லட்சம் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து கானானை கிட்டி சேரும் முன் கன்மலையைப் பார்த்து பேசு என்ற கர்த்தரின் கட்டளையை மறந்து, முன் செய்தவாறே கன்மலையை அடித்தார். கன்மலையில் இருந்து தண்ணீர் வந்தது என்றாலும் அவருடைய கவனக்குறைவினால் கானானை சுதந்தரிக்க முடியவில்லை.
நாமும் நம் எண்ணங்களின்படி வாழ முயற்சிக்க கூடாது. இயேசு தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும் தமது காது கேட்டபடி தீர்ப்புச் செய்யாமலும் இருந்தார். (ஏசாயா 11:3) நாமும் கூட சோதனைகள் வரும் காலத்தில் நம் எண்ணங்களின் படி அல்ல, கர்த்தரையே நம்பிக்கையாகக் கொள்வோம். அவரே சோதனை காலத்திற்கு தப்பும் படியான போக்கை உண்டு பண்ணுவார். சோதனையை ஜெயிக்கவும் பெலன் தருவார். இம்மையில் நூறத்தனையான ஆசீர்வாதங்களையும், மறுமையில் பரம கானானை சுதந்தரிக்கவும் செய்வார்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
முகாமில் பங்கு பெற்ற வாலிபர்கள் எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் நிலைத்து நிற்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864