Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.08.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 04-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 04.08.2024 (Kids Special)

 

ராஜாவை சுமக்கும் யானை

 

“…நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” - யோவான் 14:6

 

அன்புச் செல்லங்களே, நல்லா இருக்கீங்களா? நல்லா சாப்பிடுறீங்களா? அம்மா செய்து தரும் உணவை விரும்பி சாப்பிடணும். அடிக்கடி கடையில் சாப்பிட்டால் டாக்டர்கிட்ட போய் மாத்திரை சாப்பிடணும். வேண்டாம்தானே. healthy Food சாப்பிட்டு healthy - யாக இருக்கணும். ok குட்டீஸ் கதை கேட்கலாமா?

ஒரு ராஜா இருந்தார். இந்த ராஜாவை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல யானையை அழகாக அலங்காரம் பண்ணி ரெடியா வச்சிருந்தாங்க. அப்பொழுது Car எல்லாம் கிடையாது அல்லவா? அதனால் யானை மேல் ராஜாவை அமர வைத்து ஒரு பெரிய படை அவர் பின்னால் செல்லும். அவரை பார்க்க மக்கள் வரிசையாக நிற்பார்கள். அப்படி போய் கொண்டிருக்கும் போது, ஒரு நாய் பின்னால் வந்து "லொள், லொள்" என்று குரைத்தபடியே வந்தது. யானையைப் பார்த்து தான் ரொம்ப குரைத்தது. அட! இந்த யானை தும்பிக்கையாலே தூக்கி ஒரு போடு போட்டால் அவ்ளோ தான், close ஆகி விடும். ஆனால் அமைதியாக போய் கொண்டிருக்கிறதே இந்த யானை என்று எல்லாரும் நினைத்தார்கள்.

 

யானை என்ன நினைத்தது தெரியுமா? நான் நாயை பார்த்து எதாவது செய்ய, என் அசைவில் ராஜா பயந்து விடக்கூடாது. ராஜாவை பத்திரமாக அரண்மனைக்குக் கொண்டு போய் சேர்க்கணும். அதுதான் என்னோட வேலை. அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாய் குரைத்ததை கண்டு கொள்ளாமல் இருந்தது. ராஜாவும் சந்தோஷமாய் யானைமேல் சவாரி செய்து பத்திரமாக அரண்மனை வந்து சேர்ந்தார்.

 

கதையை கேட்டீங்களா? குட்டீஸ்! யானைக்கு இருக்கிற பெருந்தன்மை நமக்கு இருக்க வேண்டும். நாய் குரைத்தால் எனக்கென்ன? என் ராஜாவை பத்திரமாய் அழைத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்தது. அதுபோல உங்களுக்குள்ளேயும் இயேசு ராஜா இருக்குறார். அவர் கஷ்டப்படுகிற மாதிரி எதையும் செய்யக் கூடாது. Homework பண்ணாமல் Miss ஐ ஏமாற்றுவது, test - இல் பார்த்து எழுதுவது, கீழ்ப்படியாமல் இருப்பது இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இல்லையா? இப்படிப்பட்ட காரியங்கள், நம்மை பரலோகம் செல்லவிடாமல் தடுக்கிறது. இயேசு ராஜாவை நீ விடாமல் பிடித்துக் கொண்டு பரலோகம் செல்ல வேண்டும். இயேசு இல்லாமல் பரலோகம் செல்ல முடியாது. செல்லங்களே! நான் சொல்வது புரிகிறதா? ok Bye.

- Sis. தெபொராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al