Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.08.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 01-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 01.08.2024

 

கட்டுகளை அவிழ்ப்போம்

 

“இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன்" - நாகூம் 1:13

 

ஒரு கிராமத்தில் நான் சிறுவர் ஊழியம் செய்து கொண்டிருந்தேன். சிறுவர்களுக்கு பாடல், கதை, வசனம் சொல்லும்போது ஒரு சிறுவன் மிகவும் சேட்டை பண்ணிக்கொண்டு மற்ற சிறுவர்களை கவனிக்க விடாமல் இருந்தான். எனக்கு அவன் மேல் மிகவும் கோபமாக வந்தது. எல்லாம் முடித்துவிட்டு நான் பிள்ளைகளிடம் மனப்பாட வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அவனிடமும் கேட்டேன். அவன் ஆஹ் என சொல்லித் திக்கினான். நான் இவ்வளவு நேரம் கவனிக்காமல் ஆடினாயே கவனித்து இருந்தால் இப்போது சொல்லலாமே என சொல்லி அடிப்பதற்கு கையை ஓங்கினேன். அவன் உடனே வசனத்தை சொல்லி விட்டான். ஜெபித்து முடித்து பிள்ளைகளை அனுப்பிவிட்டு நான் கிளம்பும்போது அவன் தன் அம்மாவோடு வந்தான். நான் பயந்து அவ்வளவுதான் இன்றைக்கு நமக்கு அடிதான் விழப்போகிறது என நினைத்தேன். ஆனால் அவர்கள், "என் மகன் இத்தனை நாட்களாய் பேசாமல் இருந்தான். இப்போது நன்றாக பேசுகிறான். என்ன செய்தீர்கள் தம்பி?" என்றார்கள். நான் இயேசுவைப் பற்றி அவர்களிடம் சொல்லி அவர்தான் அற்புதம் செய்தார் என்றேன்.

 

இதுபோல் பாவக்கட்டுகளினால், சாபக்கட்டுகளினால் கட்டப்பட்டு செயல்பட முடியாமல் இருப்பவர்கள் நம்மைச் சுற்றி அநேகர் உண்டு. நீங்கள் எழுந்து புறப்பட்டுச் சென்றால் உங்கள் மூலம் இயேசு அவர்கள் கட்டுகளை அவிழ்ப்பார். விசுவாசம் மட்டும் இருந்தால் போதும். இப்படித்தான் இயேசுவின் சீஷரிடம் சந்திரரோகியாய் இருந்த தன் மகனை ஒருவர் கொண்டு வந்தார். அவர்களால் ஜெபித்து சுகமாக்க முடியவில்லை என்றதும் இயேசுவிடம் அழைத்து வந்தார். அப்போது அவன் விடுதலையானான். சீஷர்கள் எங்களால் ஏன் கூடாமல் போயிற்று என்று இயேசுவிடம் கேட்டதும் உங்களுக்கு விசுவாசம் இல்லை என்றார். பேதுருவிற்காக சபையார் கூடி ஜெபித்த போது பேதுருவின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டது.  

 

இப்போதும் இதை வாசிக்கும் அன்பரே! இதைபோல் கட்டுண்டவர்களை விடுதலையாக்க நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால் இயேசுவிடம் அழைத்து வாருங்கள். சபைக்கு அழைத்து வாருங்கள். இம்மாதம் 15ஆம் தேதி வாலிபர்கள் கட்டுகளில் இருந்து விடுபட்டு எழுப்புதல் அடைய, எழுப்புதல் வாலிபர் முகாம் நடத்துகிறோம். திருச்சியில் மொராய் சிட்டியில் வைத்து எழுப்புதல் வாலிபர் முகாம் நடத்தப்படும். அங்கு உங்கள் வீட்டில் உள்ள வாலிபர்கள் மற்றும் வீட்டிற்கு அருகில் உள்ள வாலிபர்களையும் அழைத்து வாருங்கள். அவர்கள் கட்டுகளிலிருந்து விடுபட்டு எழுப்புதல் அடைவார்கள்.

- K. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு:

திருச்சியில் வைத்து நடைபெற உள்ள வாலிபர் முகாமில் 1 லட்ச வாலிபர்கள் கலந்து கொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al