Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29.07.2024
Share:

By Village Missionary Movement

Monday, 29-Jul-2024

இன்றைய தியானம்(Tamil) 29.07.2024

 

காரிய மாறுதல்

 

“…தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" - ரோமர் 8:28

 

அகாஸ்வேரு ராஜாவின் ராஜ்யத்தில் அழிவிலிருந்து தப்பிய யூதர்கள் அக்கினி சூளையினின்று சேதமின்றி தப்பிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, சிங்கங்களின் வாய்க்கு தப்பிய தானியேல், ஏசாயாவின் மூலமாக மரணம் முன்னறிவிக்கப்பட்டும் ஆயுளில் 15 வருடங்கள் கூட்டப்பட்ட எசேக்கியா ராஜா ஆகியோரின் காரியங்கள் நன்மைக்கு ஏதுவாக மாறுதலாக முடிந்ததைக் காணும்போது, நம்முடைய காரியங்களும் நாம் விரும்பும் விதத்தில் மாறுதலாக முடிய விரும்புவது இயற்கைதான். ஆனால் இதைப் பற்றி வேதம் நமக்கு கற்றுத் தருவது என்ன என்று பார்ப்போம். 

  

முதலாவதாக நாம் கேட்கும் காரியங்கள் தேவ சித்தத்தின்படி இருந்தால் அவற்றை பெற்றுக் கொள்வோம். (1 யோவான் 5:14) யூதர்கள் அழிவினின்றி இரட்சிக்கப்படுவது தேவசித்தமாயிருந்தது. ஆனாலும் எஸ்தர் அவளது தாதிமார் மற்றும் யூதர்கள் அனைவரும் மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிப்பது அவசியமாயிருந்தது. தானியேல் மற்றும் அவருடைய நண்பர்கள் தேவன் பேரில் வைத்திருந்த வைராக்கியமும் விசுவாசமும் அவர்கள் மூலமாக தேவ நாமம் பாபிலோனில் மகிமைப்படும்படி அவர்கள் காரியங்கள் ஜெயமாக மாறின. எசேக்கியா ராஜாவின் கண்ணீர் நிறைந்த விண்ணப்பம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தையே மாற்றி விட்டது.  

 

பிரியமானவர்களே! தேவனுக்கு சித்தம் இருந்தால் நாம் உபவாசத்தோடும் கண்ணீரோடும் ஏறெடுக்கும் ஜெபம் நம் காரியங்களை மாறுதலாக முடியச் செய்யும். நாம் தேவனுக்காக வைராக்கியமான கிறிஸ்தவர்களாக வாழும்போது நமக்கு எதிராக உருவாக்கப்படும் ஆயுதங்கள் வாய்க்காமற்போய், நம்மை எதிர்ப்பவர்கள் நம் பட்சம் வருவார்கள். அதே வேளை நம் காரியங்கள் நாம் விரும்பும் வகையில் மாறாவிட்டாலும் எந்த விரும்பத்தகாத சூழ்நிலையையும் கடந்து செல்ல தேவன் பெலன் தருவார். அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்ற சத்தியத்தின் மீது அசையா விசுவாசம் நமக்கு வேண்டும். நாம் அவரிடத்தில் அன்பு கூருகிறவர்கள்தான் என்ற நிச்சயமும் மிக அவசியம். இவைகள் நமக்கு இருந்தால் நம் கிறிஸ்தவ வாழ்க்கை கற்பாறையின் மீது அஸ்திபாரமிடப்பட்ட வீட்டை போல எல்லா சூழ்நிலைகளிலும் உறுதியாக இருக்கும். ஆமென்.

- Mrs. கீதா ரிச்சர்ட்

 

ஜெபக்குறிப்பு: 

நம் வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet