Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.07.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 25-Jul-2024

இன்றைய தியானம்(Tamil) 25.07.2024

 

பூச்சியின் ஆசை

 

“தன் கூட்டை விட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்” - நீதி. 27:8

 

ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் மின் வசதி ஏதும் இல்லாத காரணத்தினால் சாயங்கால நேரத்திற்கு பின்பு அந்த கிராமமே இருள் அடைந்து காணப்பட்டது. ஆனால் ஒரு வீட்டில் மட்டும் திடீரென்று வெளிச்சம் வந்தது. அது விளக்கின் வெளிச்சம். அந்த வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்ட சில பூச்சிகள் அந்த வீட்டுக்குள் வந்தன. அதில் ஒரு பூச்சி மற்ற பூச்சிகளை பார்த்து, "ஆ! எவ்வளவு அழகாக நெருப்பு எரிகிறது. எல்லோரும் இந்த எரிகிற விளக்கைப் பார்த்து ரசிக்கின்றனரே. அதனால் நானும் இந்த நெருப்பில் பட்டால் நெருப்பாக மாறுவேன். எல்லாரும் என்னையும் பார்த்து ரசிப்பார்கள்" என்றது. அதற்கு மற்ற பூச்சிகள், "ஐயோ! வேண்டாம் இயேசப்பா நமக்கென்று ஒரு தனித்துவமான உருவமும் அழகும் தந்திருக்காங்க அதனால் நீ நெருப்பாக மாற ஆசைப்பட்டு உன்னுடைய தனித்துவத்தை இழந்து விடாதே" என்று சொன்னது. ஆனால் அந்த பூச்சி சொல்வதை எதுவும் கேட்கவில்லை. வேகமாக சென்று அந்த எரிகிற நெருப்பில் பட்டது. அந்தோ பரிதாபம்! அது எரிந்து சாம்பலாகிப் போனது.  

 

இதேபோலத்தான் நம்முடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்தானத்தை ஆண்டவர் தந்திருக்கிறார். நமக்கென்று தந்திருக்கும் ஸ்தானத்திலிருந்து நாம் அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். உதாரணத்திற்கு நாம் வேதாகமத்தில் பார்க்கும்போது லூசிபர் என்ற தூதனுக்கு ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருந்து அவரை துதிக்கும் ஸ்தானம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆண்டவருடைய பரிசுத்த பர்வதத்தில் இருக்கும் ஸ்தானம் (எசேக்கியா 28:14) அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் தேவன் தந்த ஸ்தானத்தின் மகிமையை உணராமல் தேவனுடைய சிங்காசனத்திற்கு ஆசைப்பட்டதால் பாதாளத்திற்கே தள்ளப்பட்டான். தன் ஸ்தானத்தை இழந்தான். இதே போல நம்முடைய வாழ்க்கையிலும் ஆண்டவர் வைத்திருக்கும் இடத்திற்கு ஒரு நோக்கம் உள்ளது.

 

பிரியமானவர்களே! நாம் நம்மை தேவன் வைத்திருக்கும் ஸ்தானத்தின் நன்மை, மகிமையை அறியாமல் மற்றவர்கள் ஸ்தானத்தை பார்த்து அப்படியே மாற விரும்புகிறோம். ஆகவே, நாம் பெருமையின் நிமித்தமோ, ஆசையின் நிமித்தமோ ஆண்டவர் நமக்கு கொடுத்த ஸ்தானத்தை இழக்காமல் அவருடைய நோக்கத்தை தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஸ்தானத்திலிருந்து மன மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவோம். நம் ஓட்டத்தில் நமக்கு நியமித்த பாதையில் ஓடி ஜெயிப்போம் . தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஆமென்!

- Sis. எல்சி

 

ஜெபக்குறிப்பு: 

தோழமை ஊழியர்களாக இணைந்துள்ள ஊழியர்களின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet