Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  22-04-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 22-Apr-2021

இன்றைய தியானம்(Tamil)  22-04-2021

செய்ததும் சொல்லப்படும் 

“இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும்...” – மத்தேயு 26:13

1743ம் ஆண்டு டேவிட் பிரெனாய்ட் அவர்கள் தனது 25வது வயதில் ஸ்காட்லாந்து மிஷனெரி சங்கத்தால் அமெரிக்காவிற்கு மிஷனெரியாக அனுப்பப்பட்டார். செவ்விந்தியர் மத்தியிலே இரவு பகலாய் ஊழியம் செய்தார். முழங்காலிலேயே இரவுகளை கழித்தார். நாளடைவில் அவர் T.B. வியாதியால் தாக்கப்பட்டார். இதினிமித்தம் அடிக்கடி இரத்த வாந்தி எடுத்து, மிகவும் பெலவீனமாயிருந்த போதிலும் அவர் தனக்குள்ளிருந்த, வல்லமையான பரிசுத்த ஆவியானவரால் அநேக செவ்விந்தியர்களை கர்த்தருடைய அன்பிற்குள் கொண்டு வந்த பாத்திரமாக செயல்பட்டார். அவருடைய ஊழியம் 4 வருடங்களே. அவர் தனது 29 வது வயதில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாலும் அவருடைய ஊழியத்தையும், அவரையும் இன்றும் நினைவுகூரும்படியாக அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது. அவர் எழுதிய டைரி குறிப்புகளையெல்லாம் தொகுத்து வெளிவந்த புத்தகம் இன்றுவரை அநேகரைத் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறது. அதன் மூலம் ஜெபிக்க தங்களை ஒப்புக்கொடுத்தோர், ஊழியத்தை உற்சாகமாக செய்ய ஆரம்பித்தோர் ஏராளம் ஏராளம். 

பரிசுத்த வேதாகமத்தில் ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, இயேசுகிறிஸ்துவின் சிரசின்மேல் ஊற்றினாள். அப்போது நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்லுகிறார் “இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும்” என்றார். 

இதை வாசிக்கின்ற எனக்கன்பானவர்களே! டேவிட் பிரெனாய்ட் உலகில் ஊழியம் செய்த நாட்கள் மிகவும் குறைவு. ஆனால் அவருடைய ஊழியத்தைக் குறித்து இன்றும் அநேகருக்கு சொல்லும்படியாக அவருடைய வாழ்க்கை சரித்திரம் அமைந்துள்ளது. அவருடைய வாழ்க்கை இன்றும் அநேக வாலிபர்களை ஊழியத்திற்கென்று ஒப்புக்கொடுக்கும்படியாக சவாலாக இருக்கிறது. அவர் வாழ்ந்த வாழ்க்கை இன்றும் கிறிஸ்தவ வட்டாரங்களில் பேசப்படுகிறது. பரிமளதைலம் ஊற்றின ஸ்திரீயைப் பற்றி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் நாம் இன்றும் பேசுகிறோம். நம்முடைய வாழ்க்கை, நம்முடைய காரியம் மற்றவர்களுக்கு பிரயோஜனம் உண்டாகும்படி இருக்கட்டும். இந்த உலகத்திலுள்ள மனிதர்களால் நாம் பேசப்படாவிட்டாலும், பரலோகத்தில் நம் தேவனால் சொல்லப்படட்டும். 
-    E. பொன்சேகர் 

ஜெபக்குறிப்பு:
மோட்சப்பயணம் தியான இதழ் மாதந்தோறும் அச்சடிப்பதற்கும், வெளியிடுவதற்குமான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al