இன்றைய தியானம்(Tamil) 13.04.2024
இன்றைய தியானம்(Tamil) 13.04.2024
உபவாசம்
"பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்;…" - யோவேல் 1:14
ராமு சிறந்த ஓட்டப்பந்தய வீரன். ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் முதன் முறையாக மாவட்ட அளவிலான போட்டிக்கு தன் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனுக்கு சிறப்பு பயிற்சியை ஆரம்பித்தனர். அப்போது முதலில் அவனது உயரம், எடை பார்க்கப்பட்டது. பின் பயிற்சியை ஆசிரியர் ஆரம்பித்தார். எடையைக் குறைக்க வேண்டுமென ஆலோசனை கொடுத்தார். சாப்பாட்டு முறைகளைக் கூறினார். பந்தயத்தன்று ஆசிரியர் ராமுவை காலையில் சாப்பிடாமல் நான் கொடுப்பதை வாங்கிக்கொள் என்று கூறி ஜூஸ் மற்றும் குளுக்கோஸ் கொடுத்தார். காலை ஏழு மணிக்கு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. ராமு வெற்றி பெற்றான். ஆம், விரும்பிய உணவை வெறுக்கவும், தேவைப்படும் போது உணவை தவிர்க்கவும் அறிந்தவர்கள் மட்டுமே விளையாட்டுத் துறையில் வெற்றி பெற முடியும். நம் ஆவிக்குரிய வாழ்விலும் உபவாசம் அவசியம்.
ஆனால் இன்று கிறிஸ்தவ உலகில் உபவாசம் மறக்கப்பட்ட ஒரு காரியமாகி விட்டது. Fasting அல்ல Feesting தான் பழக்கமாகி விட்டது. எஸ்தர் ராஜாத்தி உபவாசித்து ஜெபித்து யூத குலத்தை காப்பாற்றினார்கள். நினிவே மக்கள் உபவாசித்து ஜெபித்து தேவனுடைய இரக்கத்தையும் பெற்றனர். மேலும் அழிவிலிருந்து காக்கப்பட்டனர். நெகேமியா உபவாசித்து ஜெபித்து தேவ திட்டத்தை பெற்று நிறைவேற்றி முடித்தார். ஏன் இயேசு கிறிஸ்துவே இவ்வுலகில் உலாவிய நாட்களில் தன் ஊழியத்தைத் தொடங்கும் முன் உபவாசித்து ஜெபித்து ஆரம்பிக்கிறார். பிசாசை வசனத்தைக் கொண்டு உபவாசத்தின் பலனால் ஜெயித்தார். பிசாசுகளை ஜெயிக்க வேண்டுமானால் உபவாசம் அவசியம். "இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது என மத்தேயு 17:21ல் வாசிக்கிறோம். உபவாசிக்கும் போது ஜெபத்திலும், வேத வாசிப்பிலும் தரித்திருக்க வேண்டும். அப்போது புது பெலன் பெறுவோம். அதனால் கஷ்டமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க முடிகிறது.
பிரியமானவர்களே, பாவ சாப கட்டுகளினால் கட்டப்பட்டுள்ளேன், விடுபட வேண்டும் என விரும்புகிறீர்களா? ஒரு பொழுதாவது உபவாசித்து அவர் பாதத்தில் அமருங்கள். ஒரு காரியத்தைத் தொடங்கும் முன் ஜெயமாய் முடிக்க உபவாசித்து ஜெபியுங்கள். இயேசுகிறிஸ்து மணவாளன் எடுபடும் நாட்கள் வரும் அப்பொழுது உபவாசிப்பார்கள் என்கிறார். ஆனால் நாம் இருக்கும் காலத்தை அறியாமல் உபவாசிக்காமல் இருக்கிறோம். உபவாசிப்போம், பிசாசுகளை ஜெயித்து உலகத்தில் அவருடன் ஜெய வாழ்வு வாழுவோம்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
நம்மோடு இணைந்துள்ள தோழமை ஊழியர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864