Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 26.03.2025

இன்றைய தியானம்(Tamil) 26.03.2025

 

விழித்திருங்கள்

 

"எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்" - 1 பேதுரு 4:7

 

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்த, கல்வித்தொகை வாங்கிக்கொண்டு இருந்த ஒரு ஏழை மாணவன் பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுதும்போது, இரவு விழித்துக் கொண்டு படித்ததால் காலையில் தூங்கிவிட்டான். நன்றாக படிக்கும் அந்த மாணவன் பரீட்சைக்கு வராத காரணத்தினால் ஆசிரியர் அவன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவன் தூங்கிக் கொண்டிருந்தான். ஆசிரியர் அவனை அழைத்து வந்து எக்ஸாம் ஹாலில் சூப்பர்வைசர் அனுமதியுடன் அவனை எக்ஸாம் எழுத வைத்தார். அந்த மாணவன் School First mark எடுக்க கடவுள் உதவி செய்தார்.   

 

வேதாகமத்திலும், மத்தேயு 25லே ஐந்து புத்தி இல்லாத கன்னிகைகள், மணவாளன் வரும்போது தூங்கிவிட்டதினால் கல்யாண வீட்டிற்குள் பிரவேசிக்க முடியவில்லை. தேவனை அறிந்த நாம் இருளின் பிள்ளைகள் அல்ல மற்றவர்கள் தூங்குவது போல் தூங்காமல் விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாய் இருக்க வேண்டும். இருள் தீமைக்கு அடையாளம். இரவு நேரத்தில் தான் மதுபான பிரியர்களும், கேளிக்கை பிரியர்களும், கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். துன்மார்க்கர் செய்யும் செயல்கள் யாரும் பார்க்கக்கூடாது என்று இரவு நேரத்தில் செயல்பட ஆரம்பிப்பார்கள். கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல்கள் இரவு நேரத்தில் தான் செய்கின்றனர்.

          

நாமும் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் வாழாமல், அவரது இரண்டாவது வருகைக்கு ஆயத்தமாகி காத்திராவிட்டால் கிறிஸ்துவின் வருகையில் அவரோடு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டு விடுவோம். கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்கள் நம் கண் முன்னே நடைபெறுகிறது. இப்போது கூட அநேக இடங்களில் போர்கள், பேரழிவுகள் என பல நிகழ்வுகள் வருகைக்கான அடையாளங்களாக காணப்படுகின்றன. தனிப்பட்ட உலக கவலைகளினாலும் தவறான உபதேசத்தினாலும் நாம் தவறான உலக மக்களோடு சேர்ந்து தூங்கி விட வாய்ப்புள்ளது. ஆகவே எப்பொழுது இயேசுகிறிஸ்து வருவார் எனத் தெரியாததினால் தெளிந்த புத்தி உள்ளவர்களாய் விழித்திருந்து ஜீவனம் செய்து, மகிழ்ச்சியுடன் அவருடன் செல்வோமாக. ஆமென். 

- S .சிந்து

 

ஜெபக்குறிப்பு:- 

வடமாநிலங்களிலும் கெத்செமனே வளாகம் எழுப்புவதற்கான இடங்கள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)