Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 20.02.2025

இன்றைய தியானம்(Tamil) 20.02.2025

 

கோழி

 

"...கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக..." - மத்தேயு 23:37

 

உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் ஒரே பறவையினம் கோழி. கோழி தாயன்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் ஒரு பறவையாகும். கோழி தன் குஞ்சுகளுக்கு உணவளிப்பதுடன், உணவை எப்படி தேட வேண்டும், என்ற படிப்பினையைக் கொடுக்கிறது. எதிரிகள் வரும் போது அவர்களை எதிர்த்து போராடுகிறது. பருந்து போன்ற பறவைகள், குஞ்சுகளைத் தூக்க வரும்போது, தன்னுடைய சிறகுகளுக்குள் மறைத்து பாதுகாக்கும் தன்மையைப் பார்த்திருக்கிறோம். இவை அனைத்தும் ஒரு தாயினிடத்தில் காணக் கூடிய பாதுகாத்து, பராமரிக்கும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றது. ஆண்டவரும் நம்மை அப்படித்தான் பத்திரமாக பாதுகாத்து, பராமரித்து, உடைகளைத் தந்து, கல்வி, வேலை என பல நன்மைகளை தந்து பாதுகாத்துக் கொள்கிறார். "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" (சகரி. 2:8) என்ற வசனத்தின்படி கண்மணியைப் போல நம்மை பாதுகாக்கிற ஆண்டவர் நம்மை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

  

ஆண்டவரின் அரவணைப்பை விரும்பாத பிள்ளைகளாக அன்றைக்கு எருசலேம் நகரத்தார் இருந்தனர். "எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று (மத்.23:37) என்ற ஆண்டவர் கூறுகிறார். ஆண்டவர் நம்மை அரவணைக்கத் தயாராக இருந்தாலும் அந்த அரவணைப்பை விரும்பாத, தெரியாத மக்கள் கோடிக்கணக்கில் உண்டே! சேனைகளின் தேவனுடைய, செட்டைகளின் மறைவிலே, நம்மையும் நம்முடைய குடும்பத்தை மட்டுமே பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறோம். அவரை அறியாத மக்களும் அவருடைய அரவணைப்பைப் பெற்றுக் கொள்ள, நம்முடைய முயற்சிகள் என்ன? நாம் அவர்களுக்காக ஜெபிக்கிறோமா? ஆண்டவரிடம் வராத மக்களிடத்தில் நற்செய்தி கொண்டு சேர்க்கிறோமா? வருகையிலே ஆண்டவரிடம் நாம் எத்தனை ஆத்துமாக்களை அழைத்துச் செல்லப் போகிறோம்? யாரெல்லாம் நம்மைக் குறித்து ஆண்டவரிடம் முறையிடுவார்கள்? ஆண்டவரே உம்மைக் குறித்து இவர்கள் என்னிடம் ஒரு முறைக் கூடப் பேசியதில்லையே என்று குற்றம் சாட்டினால் நம்முடைய நிலைமை எப்படி இருக்கும்?

  

நம்மால் இயன்றவரை ஆண்டவரைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிப்போம். அவருடைய அன்பின் செட்டைகளுக்குள் வந்து, பிசாசின் தந்திரங்களிலிருந்து காக்கப்பட நம்மால் இயன்ற காரியங்கள் செய்வோம்.

 

"அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்"(ரோமர் 10:14)

- K. காமராஜ்

 

ஜெபக்குறிப்பு:

அலுவலக நிர்வாக பணியாளர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)