Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 17.02.2025

இன்றைய தியானம்(Tamil) 17.02.2025

 

கழுகு

 

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;..."-ஏசாயா 40:31

 

பல வருடங்களுக்கு முன்பு என் கணவரின் மேஜை மீது தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு சிறிய கழுகு பொம்மை இருந்தது. அதை வாங்கி அன்பு பரிசாக நான் தான் கொடுத்திருந்தேன். அதை வாங்கத் தூண்டியது மேற்கண்ட வசனம் தான். அன்று நான் கழுகு பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்றும், கழுகின் பொதுவான குணாதிசயங்கள் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொண்டேன்.

          

மேற்கண்ட வசனத்தில் இரண்டு முக்கிய வார்த்தைகள் உள்ளன. அவை "கழுகுகளைப்போல," "எழும்புவார்கள் "! கழுகுகள் செட்டைகளை அடித்து மேலே எழும்பும். ஆனால் குறிப்பிட்ட உயரம் சென்றதும் அவை செட்டைகளை அடிக்காமல் வானத்திலே உயரே பறக்கும். கழுகுகளுக்கு பெரிய, கனமான செட்டைகள் உண்டு. அவை ஒவ்வொரு முறை செட்டைகளை அடிக்கும்போதும் மிகுந்த ஆற்றலை செலவு செய்கின்றன. எனவே அவை வளிமண்டல உஷ்ணக் காற்றில் மிதக்கப் பழகும். தனது ஆற்றலை மற்றவற்றிற்கு சேமிக்கின்றன. நாமும் கழுகுளைப் போல, கடவுளின் மீதான நமது விசுவாசத்தை, கழுகின் செட்டைகள் போல விரித்து, கழுகுகள் பறக்கும் வெப்பமான வளிமண்டல காற்றான பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு, உயர எழும்புவோம். கழுகுகள் பற்றி இன்னும் அநேகம் உண்டு. அவை கூர்மையான பார்வை உடையவை, விடாமுயற்சி செய்பவை.           

 

கழுகின் இயல்பை வேதாகமத்தின் கதாபாத்திரத்துடன் ஒப்பிடும்போது, தாவீது என் நினைவுக்கு வருகிறார். தாவீது ராஜாவாகும் முன், கடவுளின் பாதுகாப்பு, வழிகாட்டுதலில் இருந்த ஒரு வலிமையான போர் வீரன்." உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்." (2 சாமுவேல் 22 : 30) ஒரு கழுகைப் போல, தாவீது துன்பங்களை எதிர்கொண்டு, வலிமையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினார். கழுகின் கூர்மையான பார்வையைப் போலவே, அவரது கூர்மையான அறிவும், கூர்நோக்கு திறனும், தேவன் மீது தாவீது கொண்டதான நம்பிக்கை போன்றவை நாம் நமது தேவனுடனான பயணத்தில் புதிய உயரங்களுக்குச் செல்வதற்கு ஒரு ஊக்கமான முன்மாதிரி. கழுகு, ஆவிக்குரிய வளர்ச்சி , கடவுளில் நாம் காணக்கூடிய வலிமை போன்றவற்றின் நினைவாகவே வேதாகமத்தில் நமக்கு உருவகமாக உள்ளது. ஆமென். அல்லேலூயா!

-S. பெர்லின் செல்லாபாய்

 

ஜெபக்குறிப்பு:

Day care center ல் உள்ள சிறுவர்களை தாங்கும் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)