இன்றைய தியானம்(Tamil) 17.11.2024 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 17.11.2024 (Kids Special)
GOOD MEDICINE
"என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக" - சங்கீதம் 66:20
எட்டாம் வகுப்பு படிக்கும் பிரபு எப்பவும் சோக முகத்தோடு இருப்பான். ஸ்கூலுக்கு போகும் போதும், இடைவேளை நேரத்திலும், ஏன் விளையாட்டு வேளையிலும் கூட அழுது கொண்டிருப்பான். அவன் முகத்தில் சந்தோஷமே இருக்காது. ஒரு சிலர் இவனை அழுமூஞ்சி பிரபுன்னுதான் கூப்பிடுவாங்க. அதுவும் அவனுக்கு வருத்தமாக இருக்கும். செல்ல குட்டிகளே! யாராவது கஷ்டப்படும் போது, அவர்களுக்கு ஆறுதலாய் தான் பேசணும். இன்னும் கொஞ்சம் வருத்தப்படுகின்ற மாதிரி பேசக்கூடாது சரியா குட்டீஸ்.
கேம்ஸ் Period வந்தது. எல்லாரும் ஜாலியா விளையாடிக் கொண்டிருந்தாங்க. பிரபு மட்டும் மரத்தடியில் சோகமாக உட்கார்ந்து இருந்தான். அவன் வகுப்பு பையன் ரவி, பிரபுவை பார்த்து எதுக்குடா எப்பவும் கவலையாக இருக்கிறாய், விளையாடலாம் வா என அழைத்தான். இல்லை நான் வரல நீ போய் விளையாடு என்று சொல்லிவிட்டான். ரவி வேகமாய் போய் P .T சாரிடம் பிரபு அழுவதை சொல்லிவிட்டான். சார் மரத்தடியை நோக்கி வந்தார். அவன் கண்ணீரைத் துடைத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்தார். அன்பான வார்த்தைகளோடு அவனிடம் பேசினார். பிரபு மனதில் உள்ள வேதனையை சொல்ல ஆரம்பித்தான். சார் எங்க அப்பா டெய்லி குடித்துவிட்டு என்னையும் என் அம்மாவையும் அடிப்பாங்க சார். பணம் எதுவும் கொடுப்பதில்லை என் அம்மாவும் அடிவாங்கி ரொம்ப உடல்நிலை சரியில்லாமல் இருக்காங்க சார், எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல என்று சொல்லி தேம்பித்தேம்பி அழுதான். இப்படி அழுது கொண்டே இருந்தால், எதுவும் நடக்காது நான் உனக்கு ஒரு மருந்து தாரேன் அதை பயன்படுத்து சரியாகிவிடும் என்று சொன்ன சாரை கண்கள் விரிய பார்த்தான் பிரபு. சொல்லுங்க சார் உடனே எங்க அப்பாவுக்கு கொடுக்கிறேன் என்று ஆர்வமுடன் கேட்ட பிரபுவுக்கு "ஜெபம்" என்ற மருந்தை சொல்லிக் கொடுத்தார். வீட்டுக்கு போன பிரபு அந்த மருந்தை பயன்படுத்தினான்.
சில நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. ஸ்கூலுக்கு சிரித்த முகத்தோடு வந்தான். P.T சாரை பார்த்து நீங்க சொன்ன மருந்து சூப்பர் மருந்து சார் என்றான். தினமும் யூஸ் பண்ணு என்று சொல்லி விட்டுப் போனார். இரவு நேரத்தில் பிரபு கண்ணீரோடு அப்பாவுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தான். ஜெபித்து விட்டு சாப்பிட வரும்போது, அப்பா அழுது கொண்டிருந்தார். தம்பி நான் கடவுளைத் தேடினதே கிடையாது நீ எனக்காக இவ்வளவு நேரம் ஜெபித்ததை பார்த்தேன். உன் ஜெபம் என்னை மாற்றிவிட்டது. இனிமேல் நான் குடிக்க மாட்டேன் என்று அப்பா சொன்னதை கேட்ட பிரபுவும், அம்மாவும் சந்தோஷப்பட்டார்கள். தொடர்ந்து குடும்ப ஜெபம் என்ற மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். சந்தோசம், சமாதானம் என்ற நறுமணம் வீச ஆரம்பித்தது. செல்ல குட்டிகளே! நீங்களும் என் அப்பா குடிக்கிறார்களே வறுமையா இருக்கிறதே! கடன் பிரச்சனை இருக்குதுன்னு சோகமா இருக்கீங்களா? ஜெபம் என்று மருந்து பயன்படுத்தி பாருங்க நீங்க நினைத்து பார்க்க முடியாத அற்புதம் நடக்கப்போகுது. நம்பினால் ஒரு அல்லேலூயா சொல்லலாமா?
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864