இன்றைய தியானம்(Tamil) 16.11.2024 (Gospel Special)
இன்றைய தியானம்(Tamil) 16.11.2024 (Gospel Special)
பிரயோஜனமான பிரயாணம்
"ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்” - அப்போஸ்தலர் 8:29
நான் வட இந்தியாவில் ஊழியம் செய்வதற்கு முதன் முறை இரயிலில் பிரயாணம் செய்தேன். அப்போது அங்கு போய் எத்தனை வருடங்களில் மொழியைக் கற்று, ஊழியம் செய்ய போகிறேனோ என்ற கலக்கம் இருந்தது. ஆனால், பாருங்கள் அந்த இரயில் பயணத்தில் சில நபர்கள், " எங்கே, என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டதற்கு நான் சரியாக பதில் கூற முடியாவிட்டாலும் இயேசு, ஜீசஸ் என்று என்னால் முடிந்த வரை பேசினேன். மேலும் அங்கு இரயில் பிரயாணத்தை முடித்து, பேருந்து, ரிக்க்ஷா என்று எதிலெல்லாம் பிரயாணம் பண்ணினேனோ அதிலெல்லாம் கேள்வி கேட்டவர்களுக்கு இயேசு என்ற ஒரு வார்த்தையை மட்டும் பேசி சமாளித்தேன். எப்படியோ ஊழியத்தை இரயில் பிரயாணத்திலேயே தொடங்க தேவன் கிருபை செய்தார்.
வேதத்தில் அப். 8 ஆம் அதிகாரத்தின் பின் பகுதியில் ஒரு அற்புதமான சம்பவம் எழுதப்பட்டுள்ளது. எத்தியோப்பிய ராஜஸ்திரீயின் மந்திரி பிரயாணம் பண்ணுவதைப் பார்க்கிறோம். அப்போது பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவை துரிதப்படுத்துவதையும் பார்க்கிறோம். பிலிப்பு கீழ்ப்படிந்து மந்திரியின் இரதத்தில் சேர்ந்து கொண்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்தார். மந்திரி அதைக் கேட்டு தண்ணீருள்ள இடத்திற்கு வந்து ஞானஸ்நானமும் பெறுகிறார். பின் சந்தோஷத்தோடே தன் நாட்டிற்கு திரும்பிப் போகிறார். பிரயோஜனமான பிரயாணமாக அந்த பிரயாணம் மாறியது.
நண்பர்களே! நாம் எங்கெங்கோ பிரயாணம் பண்ணுகிறோம். எத்தனையோ இடங்களுக்குச் செல்லுகிறோம். எத்தனையோ முறை பஸ்ஸில் அருகில் அமர்ந்து பயணிக்கும் நபருக்கு சுவிசேஷத்தை சொல் என்று பரிசுத்த ஆவியானவர் நம் மனதில் பாரத்தைக் கொடுத்து உந்தித்தள்ளினாலும், எப்படி துவங்க, எப்படி பேச என்று எண்ணி தயங்கி கொண்டிருக்கும் நேரத்திற்குள்ளாக அவரவரது நிறுத்தம் வந்துவிடும். அவர்கள் இறங்கி போயிருப்பார்கள். தருணத்தை நாம் தவறவிட்டிருப்போம். யோசியுங்கள். எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட பிரயாணங்களில் சுவிசேஷம் அறிவித்திருக்கிறோம். பிரயாணம் மேற்கொள்ளும் போது மொபைல் போன், நயச யீhடிநே, hநயன யீhடிநே என எதை எதையோ எடுத்துச் செல்கிறோம். இனிமேல் சுவிசேஷப் புத்தகங்களை, கைப்பிரதிகளை எடுத்துச் சொல்ல தீர்மானிப்போம்! பிரயாணத்தில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பார்த்து நம்பிக்கையூட்டும் நான்கு வசனங்களை சொல்லுவோம். இப்படி நாம் செய்யும்போது நாம் செய்யும் பிரயாணம் நமக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும்.
- Bro. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
இனியவளே என்ற பெண்களுக்கான டிவி நிகழ்ச்சி அநேக பெண்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை தட்டி எழுப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864