இன்றைய தியானம்(Tamil) 14.11.2024 (Gospel Special)
இன்றைய தியானம்(Tamil) 14.11.2024 (Gospel Special)
சிறுவர் தின தீர்மானம்
"…சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்;…” - மாற்கு 10:14
இன்றைக்கு Children’s day. சிறுபிள்ளைகள் குடும்பத்தில் மிகவும் முக்கியமானவர்கள். ஏனெனில் அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து வந்த சுதந்திரம். கர்ப்பத்தின் கனி அவரால் வரும் பலன். ஆண்டவர் தருகிற இந்த நன்மை மிகவும் விசேஷமானது, தலைமுறைக்கும் உரியது. ஒருமுறை தங்கள் சிறுபிள்ளைகளை இயேசுவினிடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். அவர்களை சீஷர்கள் அதட்டின போது அதைப்பார்த்த இயேசுகிறிஸ்து அவர்களை தமது பரிசுத்த கரங்களால் அணைத்துக் கொண்டு, அவர்கள் மீது தன் கரத்தை வைத்து ஆசீர்வதித்தார். அவர்களில் ஒரு சிறுபிள்ளையைத் தூக்கி இப்பிள்ளையைப்போல ஆகாவிட்டால் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று அழகாய் விளக்குகிறார். பிள்ளைகளின் சுபாவம் விசேஷமானது. கொஞ்சநேரம் சண்டைபோடுவார்கள், உடனே மறந்து விட்டு சேர்ந்து விளையாடுவார்கள்.
மறைந்த நமது பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை சிறுவர் தினமாகக் கொண்டாடும்படி கூறினார். அவர்கள் மேல் எவ்வளவு அன்பு பார்த்தீர்களா? விழாக்களில் தனக்குப் போடப்பட்ட பூமாலையை கழற்றி சிறுவர்கள் மேல் போட்டு அவர்களை மகிழ்விப்பார். ஆம், சிறுபிள்ளைகள் அன்புக்கு ஏங்குபவர்கள். அறிவுரையோ, ஆலோசனையோ அன்புடன் சொல்லும்போது அதை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியும் சுபாவமுடையவர்கள். அவர்களை உற்சாகப்படுத்தி சரியாய் வளர்ப்போமென்றால் ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்கிவிடலாம். தேசத்தின் சிறுபிள்ளைகள்தான் எதிர்கால தலைவர்கள். சபையில் இன்றைய சிறுவர்கள்தான் வருங்காலத் திருச்சபையின் தூண்கள். ஆகவே அவர்களை அற்பமாய் எண்ணாதபடி கவனமாயிருக்கவேண்டும். அப்படிச் செய்தால் தேவதூதர்கள் அந்த ரிப்போர்ட்டை பரமபிதாவிடம் கொண்டுசெல்வார்கள்.
பிள்ளை வளர்ப்பிலே பெற்றோர் மிக கவனமாக இருப்பது அவசியம். நம்முடைய வாழ்க்கையும், நம்முடைய வார்த்தைகளும் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும். அவர்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்கும் ஆவிக்குரிய தாய் - தகப்பன் தேவை. வேதத்திலே ஒரு சிறுபெண்ணின் தாய், ஒரு சீஷனின் தலையைக் கேள் என்று ஆலோசனை கூறி ராஜாவிடம் அனுப்பினாள். அதிலே வெற்றியும் பெற்றாள். எத்தனை பரிதாபம்! ஆனால் அன்னாள் என்ற தாயோ தன் முதற்பிள்ளை பிறக்கும்முன்பே அவனை ஆண்டவருக்கென்று அர்ப்பணித்து அவன் பிறந்தது முதல் ஆவிக்குரிய காரியங்களை கற்றுக்கொடுத்து ஆலயத்தில் கொண்டுபோய் விட்டாள். நாம் எப்படி நம் பிள்ளைகளை வளர்க்கப்போகிறோம்? இன்றே தீர்மானிப்போமா!
- Mrs. தெபோராள்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனைக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864