Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 06.06.2024

இன்றைய தியானம்(Tamil) 06.06.2024

 

புழுதியிலிருந்து மேன்மை!!

 

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்;…" - 1 சாமுவேல் 2:8

 

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் கடைசி மகனாகப் பிறந்தவர்தான் சச்சின் தன்வார். இவரது சிறு வயதில் இவருக்கும் கபடி விளையாட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல்தான் இருந்து வந்தார். ஆனால் நன்றாக பல்டி அடிப்பார், சுறுசுறுப்பாக இருப்பார். இந்நிலையில் ஒருமுறை இவருடைய அண்ணன் ஒருவர் காயப்பட்டதால் கபடி போட்டியில் விளையாட இவரை அழைத்தனர். இவரும் விளையாட ஆரம்பித்து வெற்றியும் பெற்றார். இவர் அன்றைக்கு பெற்ற வெற்றி அவரை அடுத்தடுத்த போட்டிகளுக்குக் கொண்டு சென்றது. மேலும் பின் நாட்களில் இந்திய அணியில் விளையாட ஆரம்பித்து, தற்போது அதிக ஸ்கோர் சேர்க்கும் கபடி வீரர்களின் பட்டியலில் உள்ளார். என்னே ஒரு மேன்மை!

 

வேதாகமத்தில் 1 சாமுவேல் 17 ம் அதிகாரத்தில் கோலியாத் என்ற ஒரு வீரன் இஸ்ரவேலின் படைகள் எல்லாவற்றையும், தேவனையும் நிந்திக்கின்றான். ஆடு மேய்க்கும் தாவீது தனது சகோதரர்களுக்கு உணவு கொடுக்க யுத்த களத்திற்குப் போயிருந்தான். அப்போது அங்கு நடக்கிற எல்லாவற்றையும் பார்க்கிறான். அந்த கோலியாத்தோடு யுத்தம் பண்ணி ஜெயிக்கிறான். அன்றைய தினம் தாவீது ஜெயித்த ஜெயம் இன்று வரை பேசப்படுகிறது. பின் நாட்களில் தாவீது ராஜாவாக பல யுத்தங்களை செய்து தன் ஜனத்தை நடத்தினான்.

 

பிரியமானவர்களே, தாவீது ஒரு ஆடு மேய்கிற இளைஞன். அவனுக்கும் ராஜ பதவிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஆனால் தேவனின் செயலைப் பாருங்கள். புழுதியிலிருந்து தாவீதை எடுத்து மேன்மையான இடத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தார். இன்றைக்கு உங்களது வாழ்வின் நிலைமை புழுதியைப் போல இருக்கிறதா? முன்னேற முடியவில்லையே என்று நீங்கள் தவிக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். ஒரு நாள் வரும் எந்த உயர்வுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைவிடவும் மேலாக தேவன் உங்களை உயர்த்த முடியும். தேவனுடைய கைகளில் உங்களை அர்ப்பணித்து காத்திருங்கள். புழுதியிலிருந்த உங்களை உயர்த்தி மேன்மையாக வைத்து அழகு பார்ப்பது நிச்சயம்! அல்லேலூயா!!

 

சேற்றிலிருந்து கன்மலைக்கு . . .  

புழுதியிலிருந்து மேன்மைக்கு . . . 

குப்பையிலிருந்து கோபுரத்திற்கு . . . 

உங்களை உயர்த்த அவர் ஒருவராலே ஆகும்.

 

- T. சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு

தெபொராள் ஜெபக்குழுக்கள் இல்லாத தாலுக்காக்களில் தெபொராள் ஜெபக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)