Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 05.06.2024

இன்றைய தியானம்(Tamil) 05.06.2024

 

வெற்றி வாழ்க்கை

 

"…தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்" - 1 கொரிந்தியர் 10:12

 

மிருகக்காட்சி சாலையிலே சிங்கம் இருந்த இடத்திற்குள் ஒரு பிள்ளை தவறி விழுந்துவிட்டது. பெற்ற தாய் தன் பிள்ளையை அதில் போடுவாளா? இல்லை அல்லவா? என்னவென்றால் அந்தத் தாய் தன் குழந்தையை வைத்திருந்த இடம் ஆபத்தானதாக இருந்ததாலேதான் குழந்தை விழுந்தது!

 

பாவத்தின் விளிம்பில் நின்றுகொண்டு, நான் நிற்கிறேன், விழமாட்டேன் என்று சொல்லுகிறவனின் நிலையும் இப்படித்தான் இருக்கும். எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் தேவனின் வழிநடத்துதலைக் கண்ணாரக் கண்டு அனுபவித்தவர்கள், தேவனைவிட்டு விலகிச் சோரம் போனார்கள். தேவனை பரீட்சை செய்ததினாலும், முறுமுறுத்ததினாலும் அழிக்கப்பட்டார்கள். தேவனுடைய வழிநடத்துதலைப் பெற்ற இவர்களின் வாழ்வில் வீழ்ச்சி வந்தது போல நம் வாழ்விலும் வீழ்ச்சி வரலாம். நாம் எச்சரிப்போடு வாழ வேண்டும்.

 

நம்முடைய வாழ்வில் வரும் துன்ப சோதனையைத் தாங்கிக்கொள்ளும் திராணியையும், பாவச் சோதனைக்கு தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்க தேவன் வல்லமையுள்ளவராயிருக்கிறார். நமது பொறுப்பு எச்சரிப்போடு வாழுவதே! பாவத்தின் விளிம்பில் நின்று கொண்டு விளையாடக் கூடாது. நமது சுய புத்தியில் சாய்ந்து அநேக நேரங்களில் நமக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணையில் வாழ்வதினால் விழுந்து போகிறோம். "அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை" (நீதிமொழிகள் 16:18)

 

நாம் எங்கே நிற்கிறோம்? அகந்தை கொண்டு மனமேட்டிமையோடு வாழ்கிறோமா என்பதை நிதானித்துப் பார்ப்போம். பாவத்தில் விழுந்து விழுந்து எழுப்புவதைவிட, தேவபெலனோடு கவனமாக வாழுவது வெற்றியுள்ள வாழ்வுக்கு வழிவகுக்கும் அல்லவா! "நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" (சங்கீதம் 119:11)

 

ஆம், பிரியமானவர்களே! நாம் மிக மிக கவனத்தோடு வாழ வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தெளிந்த புத்தியுள்ளவர்களாய், வேத வசனத்தை இருதயமாகிய பலகையில் எழுதினவர்களாக ஜாக்கிரதையோடு வாழ்ந்து வாடாத ஜீவ கிரீடத்தை சுதந்தரித்துக் கொள்ளுவோம். ஆமென்.

- Mrs. பெர்லின் செல்லாபாய்

 

ஜெபக்குறிப்பு: 

தெபொராள் ஜெபக்குழுக்கள் மூலம் செய்யப்படும் ஊழியங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)