Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  11-03-2021

இன்றைய தியானம்(Tamil)  11-03-2021

திட்டம் துவங்கும் 

“...இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன்...” – யாத். 3:3 

பழ மரங்கள் நிறைந்த ஒரு அழகான தோட்டம் அது! அங்குள்ள பழ மரங்கள் எல்லாம் தன்னுடைய பழங்களின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது. முதலில் ஆப்பிள் மரம் பேசத் தொடங்கியது, “நான் ரொம்ப காஸ்ட்லி, என்னுடைய பழம்தான் எல்லாராலும் விரும்பப்படுவதும், சத்து நிறைந்ததும் நான்தான்” என்றது. இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே ஆரஞ்சு மரம், “நான் மட்டும் என்ன சும்மாவா? விட்டமின் சி சத்து நிறைந்த, கலர் புல்லானது என் பழம்தான்” என்று பெருமையடித்துக் கொண்டிருந்தது. இப்படியே எல்லாப் பழ மரங்களும் தங்களுடைய கனிகளின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தன. இதையெல்லாம் அந்த தோட்டத்தின் வேலியோரத்தில் கவனித்துக் கொண்டிருந்த முட்செடி “ச்சே எனக்குத்தான் எந்த ஒரு நல்ல தன்மையும் இல்லை, என்னிடத்தில் உள்ளதெல்லாம் முட்கள்தான். ஆகவே யாரும் என்னை நெருங்குவதில்லை” என்று கலங்கியது. ஆனால் நம் தேவன் மோசேயிடம் முட்செடியின் மத்தியிலிருந்து தான் பேசினார் என்று அதற்கு தெரியுமா, என்ன?

எகிப்தில் அடிமைப்பட்டுள்ள இலட்சக்கணக்கான இஸ்ரவேல் ஜனங்களை விடுதலையாக்க மோசே என்ற தனி மனிதனுக்கு தேவன் ஒரு முட்செடியின் மத்தியில் தான் எழுப்புதலின் திட்டம் தந்தார். இதை மோசே ஒரு அற்புதக் காட்சியாக பார்த்தான். அந்த எழுப்புதலின் திட்டத்துக்கு ஆரம்பமே அந்த முட்செடி தான். 

பிரியமானவர்களே! இன்றைக்கு நீங்களும் பிறருக்கு முட்செடியைப்போல இருக்கலாம். யாரும் நெருங்க விரும்பாத, மதிக்காத சூழ்நிலையில் இருக்கலாம். உங்களுடைய சரீர பெலவீனம், அறியாமை, ஞானக்குறைவு இவைகளால் நீங்கள் புறக்கணிக்கப்படலாம். சோர்ந்து போக வேண்டாம், சூழ்நிலைகளை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் அவர் மாற்ற வல்லவராயிருக்கிறார். ஏனெனில் சூழ்நிலைகளுக்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர். முட்செடியை அற்புதக் காட்சியாய் மாற்றி, அந்தச் செடியில் ஒரு எழுப்புதல் திட்டத்தைத் துவங்கிய தேவன் உங்களையும் எல்லாரும் ஆச்சரியப்படும் விதமாக மாற்றி உங்களிடத்தில் தம்முடைய திட்டத்தைத் துவக்குவார். அவரிடத்தில் உங்களை ஒப்புக்கொடுத்து ஒரு சிறு ஜெபம் செய்வீர்களா? 
-    J. எபிநேசர் 

ஜெபக்குறிப்பு:
7000 ஊழியர்களைக் கொண்டு 1 லட்சம் கிராமங்கள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)